கோவில்பட்டியில் கல்லூரி மாணவர் ஆக்கி: அரை இறுதி லீக் சுற்றில் தூத்துக்குடி அணி அபாரம்
Oplus_16908288

முதலமைச்சர் கோப்பைக்கான கல்லூரி களுக்கு இடையேயான ஆண்கள் ஆக்கி போட்டி கோவில்பட்டியில் கடந்த 8ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது
இப் போட்டியில் 38 மாவட்ட ஆக்கி அணிகளும் கலந்துகொண்டு விளையாடி வருகின்றன
நேற்று காலை நடைபெற்ற முதலாவது கால் இறுதிப் போட்டியில் செங்கல்பட்டு மாவட்ட அணி 8-0 என்ற கோல் கணக்கில் ஈரோடு மாவட்ட அணியை வெற்றி பெற்று அரை இறுதி லீக் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

இரண்டாவது கால் இறுதிப்போட்டியில் சென்னை மாவட்ட அணி 5-1 என்ற கோல் கணக்கில் மதுரை மாவட்ட அணியை வெற்றி பெற்றது
மூன்றாவது கால் இறுதி போட்டி கோயமுத்தூர் மாவட்ட அணி 3 – 1 என்ற கோல் கணக்கில் திருச்சி மாவட்ட அணியை வெற்றி பெற்றது.
நான்காவது கடைசி கால் இறுதிப்போட்டியில் தூத்துக்குடி மாவட்ட அணி 9 – 0 என்ற கோல் கணக்கில் கடலூர் மாவட்ட அணியை வெற்றி பெற்றது
பின்னர் மாலையில் நடைபெற்ற அரை இறுதி லீக் சுற்றின் முதல் போட்டியில் சென்னை மாவட்ட அணி 3-0 என்ற கோல் கணக்கில் செங்கல்பட்டு மாவட்ட அணியை வெற்றி பெற்றது.
இரண்டாவது லீக் போட்டியில் தூத்துக்குடி மாவட்ட அணி 8-0 என்ற கோல் கணக்கில் கோயம்புத்தூர் மாவட்ட அணியை வெற்றி பெற்றது.

தூத்துக்குடி மற்றும் சென்னை அணிகள் தலா 3 புள்ளிகள் பெற்று முன்னிலையில் உள்ளன.
இன்று காலை முதல் போட்டியாக தூத்துக்குடி -சென்னை அணிகள் விளையாடுகின்றன.
தொடர்ந்து கோயமுத்தூர் செங்கல்பட்டு அணிகளும் விளையாடுகின்றன. மாலையில் முதல் போட்டியாக கோயமுத்தூர் சென்னை அணிகளும் இறுதிப் போட்டியாக தூத்துக்குடி செங்கல்பட்டு அணிகளும் விளையாடுகின்றன. பின்னர் பரிசளிப்பு விழா நடைபெறும்







