தூத்துக்குடி மாவட்ட போலீசாரின் வாராந்திர ஓய்விற்கு கியூ.ஆர். கோடு முறை அறிமுகம்
தூத்துக்குடி மாவட்டத்தில் காவல் துறையில் பணிபுரியும் போலீசாருக்கு வாராந்திர ஓய்வு நடைமுறையில் இருந்து வருகிறது. அதை தொழில்நுட்ப ரீதியாக எளிதாக்கும் பொருட்டு, ‘வீக் ஆப் கோடு’ எனும் புதிய ‘கியூ.ஆர். கோடு’ முறையை மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் அறிமுகம் செய்தார்.

இந்த ‘கியூ.ஆர். கோடு’ அனைத்து காவல் நிலையங்களில் உள்ள அறிவிப்பு பலகையில் வைக்கப்படும். மேற்படி கியூ.ஆர். கோடை போலீசார் தங்கள் செல்போனில் ‘ஸ்கேன்’ செய்துகொள்ள வேண்டும்.
அப்போது அவர்களுக்கான வாராந்திர ஓய்வு நாளை எடுப்பதற்கான வழிமுறைகளை பின்பற்றி பதிவுசெய்தால், அது நேரடியாக சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரியின் ஒப்புதலுக்கு செல்லும்.
அதனடிப்படையில் போலீசாருக்கு ஓய்வு வழங்கும் வகையில் இந்த கியூ.ஆர். கோடு வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய வசதி, தூத்துக்குடி மாவட்ட போலீசார் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியையும், வரவேற்பையும் பெற்றுள்ளது







