பெண் குழந்தைகள் தினம்:கோவில்பட்டி அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு கிரீடம் சூட்டி ஆரத்தி எடுத்து கவுரவிப்பு
நாடு முழுவதும் அக்டோபர் 11ம் தேதி உலக பெண் குழந்தைகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி கோவில்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில் பார்க் ரோடு அங்கன்வாடி மையத்தில் பெண் குழந்தைகள் தினவிழா இன்று நடைபெற்றது.
அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு கிரீடம் சூட்டி ஆரத்தி எடுத்து கவுரவிக்கப்பட்டது. அனைவருக்கும் பரிசு மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்க தலைவர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். குழந்தைகள் வளர்ச்சித் திட்ட மேற்பார்வையாளர் பாலம்மாள்,ரோட்டரி மாவட்ட முன்னாள் துணை ஆளுநர்கள் சீனிவாசன், முத்துச் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ரோட்டரி மாவட்ட புரவலர் விநாயகா ரமேஷ் கலந்துகொண்டு பெண் குழந்தைகளுக்கு கிரீடம் சூட்டி பரிசுகள் வழங்கி கவுரப்படுத்தினார்.
ரோட்டரி சங்க நிர்வாகிகள் முத்து முருகன், கண்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர். விழா தொடக்கத்தில் வரவேற்றார் ரோட்டரி சங்க செயலாளர் பழனிக்குமார் வரவேற்று பேசினார்,முடிவில் அங்கன்வாடி ஆசிரியர் விஜயலட்சுமி நன்றி கூறினார்.







