கோவில்பட்டி மாணவிகள், பாட்டிலில் உருவாக்கிய மாதிரி ராக்கெட்
விண்வெளி அறிவியலை மக்களிடம் பரப்பும் வகையில் அக்டோபர் 4ம் தேதி முதல் 10ம் தேதி வரை சர்வதேச விண்வெளி வார விழா கொண்டாடப்படுகிறது.
அந்தவகையில் கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நேற்று விண்வெளி வாரவிழா கொண்டாடப்பட்டது.
பள்ளி மாணவிகள் பாட்டிலில் கால்பங்கு தண்ணீர் நிரப்பி காற்றடைத்து மாதிரி ராக்கெட்டை உருவாக்கி வானில் பறக்க வைத்து அசத்தினர். பல மாணவிகள் சர்வதேச விண்வெளி ஆய்வு மைய மாதிரிகளை அட்டையில் உருவாக்கினர்.

இந்நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி மாவட்ட அஸ்ட்ரோ கிளப் செயலாளர் முத்து முருகன் தலைமை தாங்கினார். அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி இயற்பியல் ஆசிரியர்கள் கிரேனா,கமலா ராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி மாநில செயற்குழு உறுப்பினர் முத்துசாமி கலந்து கொண்டு மாதிரி ராக்கெட்டை வானில் ஏவுவது குறித்து பயிற்சி அளித்தார்.
ஏராளமான பள்ளி மாணவிகள் கலந்து கொண்டு வானில் ஏவப்பட்ட மாதிரி ராக்கெட்டை பார்த்து வியந்தனர்.







