7 பெண்களுக்கு நடத்துனர் பயிற்சி சான்று
கோவில்பட்டி வட்டாரப் போக்குவரத்து அலுவ லகத்தில் தூத்துக்குடி உயர் திறன் மையத்தில் 10 நாட்கள் பயிற்சி முகாமில் பங்கேற்ற 7 பெண்களுக்கு பயிற்சி நிறைவு பெற்றது.

முதற்கட்டமாக மருத்துவர் சீதாலட்சுமி முதலுதவி குறித்தான விழிப்புணர்வை வழங்கி அவர்களுக்கு உடல் திறன் சான்றிதழை வழங்கினார்.
தொடர்ந்து வட்டாரப் போக்குவரத்து அலுவல கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் போக்குவரத்து அலுவலர் கிரிஜா, மோட்டார் வாகன ஆய்வாளர் மாசிலாமணி, பிலிக்ஸ் ஆகியோர் பயிற்சி முடித்த நபர்களுக்கு நடத்துனர் சான்றிதழை வழங்கினர்.

இந்நிகழ்வில் ஆசிரியர் ஜெயக்குமார், அம்மன் மாரிமுத்து, போக்குவ ரத்து கண்காணிப்பாளர் இன்பகுமார், விஜய குமார், நேவீஸ், ஞானசேகரன்,உட்பட பலர் கலந்து கொண்டனர்.







