கோவில்பட்டி அருகே ரூ.3500 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது
கோவில்பட்டி அருகே உள்ள ஈராச்சி கிராம நிர்வாக அலுவலகத்தில் மாரீஸ்வரி என்பவர் தனது தாத்தா சுப்பு, பாட்டி மாரியம்மாள் ஆகியோர் இறப்பினை பதிவு செய்து சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தார்.

இதற்கு சான்றிதழ் வழங்க கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார் ரூ.3500 லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. இதையடுத்து தூத்துக்குடி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் தெரிவித்தார்.
இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ஆலோசனைப்படி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளுடன் மாரீஸ்வரி கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமாரை அலுவலகத்தில் சந்தித்து பணத்தை வழங்கினார்.

கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார் பணத்தை வாங்கிய போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி பீட்டர் பால்துரை தலைமையிலான போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
கைதான கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார் 2012 ம் ஆண்டு கோவில்பட்டியில் கிராம நிர்வாக அலுவலராக இருந்த போது பட்டா மாற்றம் தொடர்பாக ரூ.3000 லஞ்சம் வாங்கியதாக தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது,







