அரசின் திட்டங்கள் மக்களுக்கு தடங்கல் இல்லாமல் சேர நடவடிக்கை; கோவில்பட்டி புதிய கோட்டாட்சியர் உறுதி
கோவில்பட்டி கோட்டாட்சியராக இருந்த மகாலட்சுமி பணி மாற்றம் செய்யப்பட்டதை தொடர்ந்து புதிய கோட்டாட்சியராக ஹிமான்சு மங்கல் நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுக் கொண்டார்.
ராஜஸ்தான் மாநிலம் தவாப்மாதப்பூரைச் சேர்ந்த இவர் மும்பை ஐ.ஐ.டி.யில் பி.டெக்., படித்துள்ளார். பின்னர் இவர் 3 ஆண்டுகள் தனியார்வங்கியில் பணியாற்றியுள்ளார்.

2023 ஆம் ஆண்டு மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட இந்திய குடிமைப் பணிகள் தேர்வில் தேர்ச்சி பெற்று தமிழ்நாடு மாநிலகேடரி ல் நியமிக்கப்பட்டார். விருதுநகர் மாவட்டத்தில் பயிற்சி ஆட்சியராக பணியாற்றி தற்போது கோவில்பட்டி கோட்டாட்சியராக நியமிக்கப்பட்துள்ளார்.

பதவி ஏற்றபிறகு செய்தியாளர்க ஹிமான்சு மங்கல் பேசுகையில், “அரசின் திட்டங்கள் மக்களுக்கு எவ்வித தடங்க லும், காலதாமதமும் இன்றி சென்றடைய உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.மக்களின் குறைகள் குறித்து எனது கவனத்திற்கு வரும்போது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பேசி தீர்வு காண நடவடிக்கை எடுப்பேன்” என்று உறுதி அளித்தார்.’
புதிய கோட்டாட்சியர் ஹிமான்சு மங்கலின் மனைவி வைஷ்ணவிபால். இவர் தென்காசி கோட்டாட்சியராக நியமிக்கப்பட்டு இதே நாளில் பொறுப்பேற்றுக்கொண்டார்,







