இளையரசனேந்தல் அரசு பள்ளியில் அறிவியல் கண்காட்சி

கோவில்பட்டி அருகே உள்ள இளையரசனேந்தல் அரசு மேல்நிலைப் பள்ளியில் விழுதுகள் முன்னாள் மாணவர்கள் அமைப்பின் சார்பாக பரிசளிப்பு விழா மற்றும் பள்ளியின் சார்பில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.

இவ்விழாவிற்கு ஆஸ்கார் கேட்ரிங் கல்லூரி சேர்மன் சுப்புராஜ்,பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சூரப்பா அப்பாசாமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். தலைமையாசிரியர் மரியசெல்வி வரவேற்புரயாற்றினார்.

10, 12 ஆம் வகுப்பு பொதுதேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு விழுதுகள் சங்கத்தின் சார்பாக பரிசுத்தொகை, கேடயம் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அறிவியல் கண்காட்சியில் பள்ளி மாணவர்கள் கண்டுபிடித்த கண்டு பிடிப்புகளை அறிவியல் கண்காட்சிகளாக வைத்திருந்தனர்.
சிறப்பு விருந்தினர்களும், ஊர் பொதுமக்களும், மாணவர்களின் பெற்றோர்களும் அறிவியல் கண்காட்சியை கண்டு பாராட்டி சென்றனர்.







