மந்தித்தோப்பு கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்கக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்
கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பு இந்திரா நகர் மேற்கு பகுதியைச் சேர்ந்த மக்கள் இந்திய கம்யூனிஸ்ட் தாலுகா செயலாளர் பாபு தலைமையில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு திரண்டனர்.

அவர்கள் தாங்கள் வசிக்கும் வீடுகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்க கேட்டு கோஷமிட்டனர். இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் சேதுராமலிங்கம்,நகரச் செயலாளர் செந்தில் ஆறுமுகம், மாவட்டக்குழு உறுப்பினர் ரெங்கநாதன்,தாலுகா உதவிச் செயலாளர் ராமகிருஷ்ணன், நகர துணைச் செயலாளர்கள் விஜயலட்சுமி, அலாவுதீன், தாலுகா குழு உறுப்பினர் மணிகண்டன், நகரப் பொருளாளர் சீனிவாசன் , நகரக்குழு உறுப்பினர் செல்லையா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து அவர்கள் துணை வட்டாட்சியர் அருணாவை சந்தித்து அளித்த மனுவில் கூறி இருந்ததாவது:-
கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பு இந்திரா நகரில் வீடு கட்டி வசித்து வரும் மக்கள் குடிநீர் மற்றும் மின் இணைப்புகள் பெற்றுள்ளனர். இதில், இந்திரா நகர் மேற்கு பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வீடுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது.

ஆனால், கிழக்கு பகுதியில் வசிக்கும் மக்களுக்கு பலமுறை முறையிட்டும் வீட்டுமனை பட்டா வழங்கப்படவில்லை. எனவே, அவர்கள் வசிக்கும் வீடுகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், இவ்வாறு அவர்கள் தெரிவித்திருந்தனர்.








