கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா; நாளை மறுநாள் கொடியேற்றம்
கோவில்பட்டியில் பிரசித்தி பெற்ற செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாதசுவாமி கோவில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா நாளை மறுநாள் (18.10.2024) வெள்ளிக்கிழமை தொடங்குகிறது, இதையொட்டி காலை 10.15 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் கொடியேற்று விழா நடக்கிறது.
தொடர்ந்து 29.10.2024 வரை விழா நடைபெறுகிறது. விழா நாட்களில் தினமும் மண்டகபடிதாரர்கள் சார்பில் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன, இதற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர்: ம.அன்புமணி, ): உதவி ஆணையர் (கூ.பொ) ஜி.செல்வி, செயல் அலுவலர்: கி.வெள்ளைச்சாமி., அறங்காவலர் குழு தலைவர் பி.எஸ்.ஏ.ராஜகுரு:மற்றும் அறங்காவலர்கள் செய்து உள்ளனர், விழா நிகழ்ச்சிகள் விவரம் வருமாறு:-
17.10.2024 வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் அங்குரார்ப்பணம்.
முதல் நாள் (18.10.2024) வெள்ளிக்கிழமை: கொடியேற்றம்.. காலை 10.15 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் கொடியேற்றுதல். இரவு 7.30 மணிக்கு புஷ்ப சப்பரத்தில் அம்மன் திருவீதி உலா..
2-வது நாள் (19.10.2024) சனிக்கிழமை: காலை 8 மணி பல்லக்கில் அம்மன் திருவீதி உலா..இரவு 7.30 மணி காமதேனு வாகனத்தில் அம்மன் திருவீதி உலா.
3-வது நாள் (20.10.2024) ஞாயிற்றுக்கிழமை: காலை 8 மணி பல்லக்கில் அம்மன் திருவீதி உலா., இரவு 7.30 மணி சிம்ம வாகனத்தில் அம்மன் திருவீதி உலா
4-வது நாள் (21.10.2024) திங்கள்கிழமை: காலை 8.00 மணி பல்லக்கில் அம்மன் திருவீதி உலா.,இரவு 7.30 மணி ரிஷப வாகனத்தில் அம்மன் திருவீதி உலா.,
5-வது நாள் (22.10.2024) செவ்வாய்கிழமை: காலை 8.00 மணி பல்லக்கில் அம்மன் திருவீதி உலா இரவு 7.30 மணி காமதேனு வாகனத்தில் அம்மன் திருவீதி உலா.,..இரவு 8 மணிக்கு: சாத்தூர்,முனைவர்.மு.கவிதா ஆன்மிக சொற்பொழிவு
6-வது நாள் (23.10.2024) புதன்கிழமை: காலை 8 மணி பல்லக்கில் அம்மன் திருவீதி உலா இரவு 7.30 மணி அன்ன வாகனத்தில் அம்மன் திருவீதி உலா.,
7-வது நாள் (24.10.2024) வியாழக்கிழமை: காலை 8 மணி பல்லக்கில் அம்மன் திருவீதி உலா இரவு 7.30 மணி சப்பரத்தில் அம்மன் திருவீதி உலா
8-வது தநாள் (25.10.2024) வெள்ளிக்கிழமை: காலை 8 மணி பல்லக்கில் அம்மன் திருவீதி உலா இரவு 7.30 மணி சப்பரத்தில் அம்மன் திருவீதி உலா
9-வது திருநாள் (26.10.2024) சனிக்கிழமை: திருத்தேர் காலை 5 மணிக்கு மேல் 5.30 மணிக்குள் ரதாரோகணம் காலை 8 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல்., இரவு 7.30 மணி அம்மன் அன்ன வாகனத்தில் திருவீதி உலா.,
10-வது நாள் (27.10.2024) ஞாயிற்றுக்கிழமை: காலை 8. மணி பல்லக்கில் அம்மன் திருவீதி உலா.,இரவு 7.30 மணி ரிஷப வாகனத்தில் அம்மன் திருவீதி உலா.,
11-வது நாள் (28.10.2024) திங்கள்கிழமை: பகல் 1 மணி தபசு சப்பரத்தில் அம்மன் தபசுக்கு எழுந்தருளல்.,இரவு 6.00 மணி சுவாமி ரிஷப வாகனத்தில் பூவனநாதராக அம்மனுக்கு காட்சி கொடுத்தல்.,காட்சி
12-வது திருநாள் (29.10.2024) செவ்வாய்கிழமை: திருக்கல்யாணம்.,காலை 8 மணி பல்லக்கில் அம்மன் திருவீதி உலா. இரவு 7.00 மணிக்கு மேல் 8.00 க்குள் ரிஷப லக்கனத்தில் திருக்கல்யாணம் நடைபெறும். பின்னர் சுவாமி யானை வாகனத்தில் அம்மன் பல்லக்கில் பட்டணப்பிரவேசம் நடைபெறும்., திருக்கல்யாணம் முடிந்தவுடன் செண்பகவல்லி அம்மன் திருக்கோவில் முன்பு அமைந்துள்ள காயத்ரி மண்டபததில் அன்னதானம் நடைபெறும்.







