இசையமைப்பாளர் அனிருத் பிறந்தநாள்; வெளியானது ‘எல்.ஐ.கே.’ படத்தின் முதல் பாடல்
பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (எல்.ஐ.கே). இந்த படத்தை தமிழ் சினிமாவில் ‘போடா போடி’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான விக்னேஷ் சிவன் இயக்குகிறார்.
எல்.ஐ.கே படத்தில் கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். மேலும் இவர்களுடன் இணைந்து எஸ்.ஜே சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனத்தின் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார்.அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் படமாக்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் முதல் பாடல் இன்று வெளியாகும் என படகுளு தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் ஏற்கனெவே அறிவித்திருந்தது.
இந்நிலையில், இன்று இசையமைப்பாளர் அனிருத் பிறந்தநாள். அவரது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய படகுழு, எல்.ஐ.கே. படத்தில் இருந்து ‘தீமா’ என்ற பாடலை இன்று வெளியீட்டுள்ளது. இந்த பாடலை அனிருத் பாடியுள்ளார். பாடல் வரிகளை விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார். யூடியூபில் வெளியாகியுள்ள இந்த பாடல் தற்போது ரசிகர்களை கவர்ந்து வருகிறது.







