முதல்-அமைச்சருடன் ரியல் எஸ்டேட் டெவலப்பர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் சந்திப்பு
சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர்.மு.க.ஸ்டாலினை , இந்திய ரியல் எஸ்டேட் டெவலப்பர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (CREDAI )தெற்கு மண்டல துணைத் தலைவர் எஸ். ஸ்ரீதர், தமிழ்நாடு தலைவர் .ஆர். இளங்கோவன், துணைத் தலைவர் மேடன் பி. லூண்ட், செயலாளர் .பி. ரவிச்சந்திரன், பொருளாளர் வி. சதாசிவம், சென்னை தலைவர் மெஹூல் எச். தோஷி, பொருளாளர் விஸ்வஜீத் குமார், I திருச்சி சேர்மன். ஆர். எஸ். ரவி, பிரசிடெண்ட். ஆர். மனோகரன் மதுரை செயலாளர். யோகேஷ் திருகோன்டா, I ஈரோடு தலைவர் எம். டி. ஈஸ்வரன், திருநெல்வேலி தலைவர். எஸ். ஆர். சிவகுமார் தாஸ், ஓசூர் செயலாளர் . பி. ஆர். ஜெய் பிரகாஷ், தருமபுரி இணைச் செயலாளர் . ஆர். சரவணன் ஆகியோர் சந்தித்தனர்.
தமிழ்நாட்டில் முதல் முறையாக பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர் மற்றும் நடுத்தர மக்கள் இணைய தளம் வாயிலாகச் சுயசான்றிதழ் அடிப்படையில் அதிகபட்சம் 2,500 சதுர அடி பரப்பளவு கொண்ட மனையிடத்தில் 3,500 சதுர அடி அளவிற்குள் கட்டப்படும் குடியிருப்பு கட்டுமானத்திற்கு உடனடியாகக் ஒற்றைச் சாளர முறையில் கட்டிட அனுமதிகளைப் பெறும் ஒருங்கிணைந்த புதிய திட்டத்தை தொடங்கி வைத்தமைக்காக நன்றி தெரிவித்தனர்.
இந்த சந்திப்பின் போது, அமைச்சரும், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழும தலைவருமான .பி.கே.சேகர்பாபு, தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா ,வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா, சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா ஆகியோர் உடனிருந்தனர்.







