மூத்த குடிமக்களுக்கான ரெயில் டிக்கெட் சலுகைகளை மீண்டும் வழங்ககோரி கோவில்பட்டியில் ஆர்ப்பாட்டம்
கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பாக கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் பயணிகளுக்கான கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் க.தமிழரசன் தலைமை தாங்கினார், செயலாளர் பெஞ்சமின் பிராங்கிளின், பொருளாளர் சுபேதார் கருப்பசாமி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். நேஷனல் சிறுதீப்பெட்டி உற்பத்தியாளர் சங்க செயலாளர் சேதுரத்தினம் ஆர்ப்பாட்டத்தை தொடக்கி வைத்தார்.
ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சி ரவிக்குமார், மருதம் மாரியப்பன், மக்கள் நீதி மய்யம் கட்சி ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் அபிராமிமுருகன், ஐ.என்.டி.யு.சி.ராஜசேகரன், தமிழ்நாடு காமராஜர் பேரவை நாஞ்சில்குமார், வழக்கறிஞர் முத்துக்குமார், தமிழ்நாடு பெண்கள் இணைப்பு குழு மேரிசீலா, தர்மம் வெல்லும் அறக்கட்டளை பூலோகப்பாண்டியன், மக்கள் நலம் அறக்கட்டளை மாரிமுத்துகுமார், ஜெகநாதன், பாண்டியனார் மக்கள் இயக்கம் சீனிராஜ் வேம்பு மக்கள் சக்தி இயக்கம் தேவராஜ், சுபத்ரா, விஸ்வநாததாஸ் தொழிலாளர் கட்சி ஜெயபால், தொழிலாளர் விடுதலை முன்னணி கலைச்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் எழுப்பப்பட்ட கோரிக்கைகள் விவரம் வருமாறு:-
‘*கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட மூத்த குடிமக்களுக்கான பயணச்சீட்டு சலுகைகளை உடனடியாக வழங்க வேண்டும்.
*கோவில்பட்டி ரெயில் நிலையத்திற்கு வந்து சென்ற கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட அனைத்து ரெயில் களையும் உடனடியாக இயக்க வேண்டும்.
*கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் நடைபெற்று வரும் விரிவாக்க பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
*இரண்டாவது நடைமேடையில் பயணிகள் பயன்படுத்த கூடுதலாக மேற்கூரையுடன் கூடிய நிழற்கூடம், இருக்கை வசதி, தண்ணீர் வசதி மற்றும் கழிப்பறை வசதி செய்து தரவேண்டும்.
*ரெயில் நிலையத்தில் நகரும் படிக்கட்டு, மின் தூக்கி, சுமைகளுடன் வரும் மூத்த குடிமக்களுக்கு மின்கலவாகனம் வசதி செய்து கொடுக்க வேண்டும்.
*பயணச்சீட்டு வழங்கும் அறைகளில் தமிழ் தெரிந்த பணியாளர்களை நியமித்திட வேண்டும்.
*வந்தேபாரத் ரெயில்கள் கோவில்பட்டியில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேற்கண்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன,







