மாணவ, மாணவிகள் பங்கேற்ற போதை ஒழிப்பு விழிப்புணர்வு நாடகம்
![மாணவ, மாணவிகள் பங்கேற்ற போதை ஒழிப்பு விழிப்புணர்வு நாடகம்](https://tn96news.com/wp-content/uploads/2024/06/53567de0-d0c6-4fd6-b9c8-3d0ae3116302-850x560.jpeg)
கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது பள்ளி முதல்வர் பிரபு தலைமை தாங்கினார்.
சிறப்பு அழைப்பாளர்களாக கோவில்பட்டி நகராட்சி சுகாதார நலத்துறை மருத்துவர் வாசுமதி, கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பிரேமா ஆகியோர் கலந்து கொண்டு போதைப் பொருட்களின் தீமைகள் மற்றும் மாணவர்களின் மனநல பாதிப்புகள் குறித்தும் தமிழக அரசு எடுத்து வரும் போதைப் பொருள் எதிர்ப்பு நடவடிக்கைகள் குறித்தும் விரிவான உரையை மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் எடுத்துரைத்தனர்.
பின்னர் மாணவர்களின் மூலம் நடைபெற்ற போதை ஒழிப்பு விழிப்புணர்வு நாடகம் மது, சிகரெட், குட்கா, புகையிலை போன்றவற்றினால் ஏற்படும் தீமைகளையும் அதனால் ஏற்படும் துன்பங்களையும் தனித்தனியாக ஆடல், பாடல்கள் மூலமாக நடித்து, அதற்கு ஈடாக மாணவர்களும் பெற்றோர்களும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதைக் குறித்த விளக்கத்தினை எடுத்துக்காட்டினர்.
இந்நிகழ்ச்சியில் மகளிர் காவல் நிலைய துணை ஆய்வாளர் சத்தியபாமா, நகராட்சி சுகாதார அலுவலர் வெங்கடேசன், சுகாதார ஆய்வாளர்கள் ஆரியங்காவு, சுதாகரன், மேற்பார்வையாளர் கனி, பொன்ராஜ் மற்றும் நகராட்சி அலுவலர்கள், காவலர் சமுத்திரக்கனி உட்பட பெற்றோர்கள், மாணவர்கள், இருபால் ஆசிரியர் பெருமக்கள், அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டு போதைப் பொருள் ஒழிப்பு தின உறுதி மொழியையும் எடுத்துக் கொண்டனர்.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)