மகளிர் சுயஉதவி குழுவினருக்கு இயற்கை வேளாண்மை பயிற்சி
கிள்ளிகுளம் வ.உ.சிதம்பரனார் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இயற்கை வேளாண்மை நண்பர்களுக்கான பயிற்சி, கயத்தாறு வட்டார மகளிர் சுய உதவிக் குழுவினர் 30 பேருக்கு நடைப்பெற்றது.
இன்று முதல் 5 நாட்களுக்கு பல்வேறு தொழில்நுட்பங்கள் பயிற்றுவிக்கப்பட உள்ளது. இப்பயிற்சியை கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி முதல்வர் முனைவர் தேரடி மணி தொடக்கி வைத்து உரையாற்றி சிறப்பித்தார்.
பனை மற்றும் வாழை ஆராய்ச்சி நிலைய தனி அதிகாரி முனைவர் வர்ணப்பிரியா வாழ்த்துரை வழங்கினார். பயிற்சியின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் காளிராஜன் வரவேற்று பேசுகையில் பயிற்சியின் நோக்கங்களை விரிவாக எடுத்துரைத்தார்.
மேலும் இன்றைய பயிற்சியில் ஜே.புவனேஸ்வரி இயற்கை வேளாண்மை பற்றியும் அதனுடைய முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார்.
மேலும் நெற்பயிற்சி, அங்கங்க வேளாண்மை, வயல்வெளி ஆராய்ச்சி நிலையத்தையும் காண்பித்து விளக்கம் அளித்தார்.
இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை முனைவர் கு. இளஞ்செழியன் லெனின் ராஜா ஆகியோர் செய்திருந்தனர்.







