கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் தமிழ் தெரிந்த ஊழியரை நியமிக்க கோரி போராட்டம்
கோவில்பட்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகரக்குழு சார்பில் ரெயில் நிலையத்தில் பயண சீட்டு கொடுக்கும் இடத்தில் தமிழ் தெரிந்த அலுவலரை நியமிக்க வேண்டும், மின் விளக்கு வசதி செய்து தர வேண்டும் என கோரி நகர செயலாளர் சரோஜா தலைமையில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது,
இதில் தாலுகா செயலாளர் பாபு,ஏ ஐ டி யூ சி மாவட்ட பஞ்சாலை தலைவர் பரமராஜ்,சிபிஐ மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் சேதுராமலிங்கம்,நகர துணை செயலாளர் முனியசாமி,வழக்கறிஞர் ரஞ்சனி கண்ணம்மா,மகளிரணி கோமதி,மாவட்டக்குழு மற்றும் நகரக்குழு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்







