பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து; 9 பேர் பலியான பரிதாபம்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி கார்னேசன் பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ். இவருக்கு ராமுத்தேவன் பட்டியில் பட்டாசு ஆலை உள்ளது. இந்த ஆலையில் பேன்சி ரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
இன்று காலையில் இருந்து வழக்கம் போல் பட்டாசு ஆலையில் பணிகள் நடந்து வந்தன. 74 அறைகளில் பேன்சி ஆக பட்டாசுகள் தயாரிப்பில் 150 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
பிற்பகலில் ஒரு அறையில் பேன்சி ரக பட்டாசுகளுக்கு மருந்து வைக்கும் பணியில் சில தொழிலாளர்களை ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக உராய்வு ஏற்பட்டு பயங்கர வெடி விபத்து நடந்தது. அந்த அறை முழுவதுமாக இடிந்து விழுந்தது.
மேலும் பக்கத்துக் கடைகளுக்கும் தீப்பொறி பறவி 4 அறைகளில் வெளி விபத்து ஏற்பட்டு கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.
இதனால் வந்த பகுதி முழுவதும் பரபரப்புக்கு உள்ளானது. தொழிலாளர் நாலாபுறமும் சிதைந்து ஓடினார்கள். இருப்பினும் வெடி விபத்து ஏற்பட்ட கட்டிட இடிபாடுகளில் சிக்கி ரமேஷ், கருப்பசாமி, அம்பிகா, முருகஜோதி, சாந்தா 9 பேர் உடல் நசுங்கி பலியானார்கள்.

தகவல் அறிந்து சிவகாசி,சாத்தூர், வெப்ப கோட்டை பகுதிகளில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். பட்டாசு ஆலை வெடிவிபத்தில் கட்டிட இடிபாடுகளில் சிக்கிஉயிருக்கு போராடிய 8 பேர் மீட் கப்பட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பலியான 9 பேர் உடல்களும் மீட்கப்பட்டன.
இதைப் பார்த்து மற்றவர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. வெடி விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.







