பவதாரணி உடல் அடக்கம்; `மயில் போல பொண்ணு ஒன்னு கிளி போல பேச்சு ஒன்னு’ பாடலை பாடிய இளையராஜா-சோகத்தில் மூழ்கிய மக்கள்
இசை அமைப்பாளர் இளையராஜா மகள் பவதாரணி. 47 வயதான் இவர் கல்லீரல் புற்று நோயினால் பாதிக்கப்பட்டு இலங்கையில் ஒரு வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் அவர் இறந்து போனார். கொழும்பு மருத்துவமனையில் உடற்கூராய்வுக்கு பிறகு தனி விமானம் மூலம் பவதாரணி உடல் நேற்று மாலை சென்னை கொண்டுவரப்பட்டது.
சென்னை தியாகராயநகரில் உள்ள இளையராஜாவின் வீட்டில் வைக்க்பப்ட்டிருந்த பவதாரணி உடலுக்கு திரை உலகினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தியபிறகு வேன் மூலம் தேனி அருகே லோயர்கேம்ப் பகுதியில் உள்ள இளையராஜாவுக்கு சொந்தமான பண்ணை தோட்டத்துக்கு இன்று காலை கொண்டு வரப்பட்டது.
பவதாரணி உடலுக்கு உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் இறுதி அஞ்சலி செலுத்தினார்கள். ஓ.பன்னீர்செல்வம், டைரக்டர் பாரதிராஜா, வெங்கட்பிரபு,யுவன் சங்கர் ராஜா, பிரேம்ஜி, உள்பட பலர் மரியாதை செலுத்தினார்கள். பாரதிராஜா “நான் வளர்த்த பிள்ளை இப்படி பேசாம கிடக்குதே” என்று கூறி கதறி அழுதார். பவதாரணி உடல் அருகே இளையராஜா அமர்ந்து சோகத்துடன் பார்த்து கொண்டிருந்தார். அவருக்கு பாரதிராஜா கண்ணீர்மல்க ஆறுதல் கூறினார்.
தொடர்ந்து பண்ணை தோட்டத்தில் பவதாரணி உடல் அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்தன. ஏற்கனவே இளையராஜாவின் தாயார், மனைவி ஆகியோர் உடல்கள் இங்கு தான் அடக்கம் செய்யப்பட்டன. அந்த இடத்தில் தனித்தனியாக சமாதி கட்டப்பட்டுள்ளது. அவற்றுக்கு அருகில் குழி தோண்டி பவதாரணி உடல் , மாலை 5.15 மணி அளவில் அடக்கம் செய்யப்பட்டது.
அப்போது இளையராஜா , மகன்கள் கார்த்திக்ராஜா, யுவன்சங்கர் ராஜா மற்றும் குடும்பத்தினர் ஒன்றாக சேர்ந்து, பாரதி படத்தில் இளையராஜா இசையில் பவதாரணி பாடிய பாடலை பாடினார்கள்.
மயில் போல
பொண்ணு ஒன்னு
கிளி போல பேச்சு
ஒன்னு
குயில் போல பாட்டு
ஒன்னு கேட்டு நின்னு மனசு
போன இடம் தெரியல அந்த
மயக்கம் எனக்கு இன்னும்
தெளியல
மயில் போல
பொண்ணு ஒன்னு
பொண்ணு ஒன்னு
வண்டியில வண்ண
மயில் நீயும் போனா சக்கரமா
என் மனசு சுத்துதடி மந்தார
மல்லி மரிகொழுந்து செம்பகமே
முன முறியாப் பூவே என
முறிச்சதேனடியோ
தங்க முகம் பார்க்க
தெனம் சூரியனும் வரலாம்
சங்கு கழுத்துக்கே பிறை
சந்திரனைத் தரலாம்
குயில் போல பாட்டு
ஒன்னு கேட்டு நின்னு மனசு
போன இடம் தெரியல அந்த
மயக்கம் எனக்கு இன்னும்
தெளியல
மயில் போல
பொண்ணு ஒன்னு கிளி போல பேச்சு
ஒன்னு
வெள்ளி நிலா
மேகத்துல வாரதுபோல்
மல்லிகப் பூ பந்தலோட
வந்தது யாரு சிறு ஓலையில
உன் நெனப்ப எழுதி வெச்சேன்
ஒரு எழுத்தறியாத காத்தும்
வந்து இழுப்பதும் என்ன
குத்து விளக்கொளியே சிறு
குட்டி நிலா ஒளியே முத்துச்
சுடர் ஒளியே ஒரு முத்தம்
நீ தருவாயா
குயில் போல பாட்டு
ஒன்னு கேட்டு நின்னு மனசு
போன இடம் தெரியல அந்த
மயக்கம் எனக்கு இன்னும்
தெளியல
மயில் போல
பொண்ணு ஒன்னு
கிளி போல பேச்சு
ஒன்னு
குயில் போல பாட்டு
ஒன்னு கேட்டு நின்னு மனசு
போன இடம் தெரியல அந்த
மயக்கம் எனக்கு இன்னும்
தெளியல
மயில் போல
பொண்ணு ஒன்னு
பொண்ணு ஒன்னு
இந்த பாடலை அனைவரும் சேர்ந்து பாடிய போது கூடியிருந்தவர்கள் கதறி அழுதனர்.







