கோவில்பட்டியில் கந்துவட்டி கும்பலை கைது செய்யக்கோரி சாலை மறியல்
கோவில்பட்டி வீரவாஞ்சி நகரைச் சேர்ந்த ஆறுமுக பாண்டி என்பவர் , கந்து வட்டிக்கு பணம் வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது. பணத்தை திருப்பி கேட்டு கந்து வட்டி கும்பலை சேர்ந்தவர்கள் வீட்டு பத்திரம், நகைகள், செக் ஆகியவற்றை பறித்து சென்றதாக் கூறப்படுகிறது.
இது பற்றி ஆறுமுகபாண்டி, மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் கடந்த 25-ந்தேதி அவர் விஷம் குடித்து விட்டார். ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஆறுமுகபாண்டி இன்று காலை இறந்து போனார். ஆறுமுக பாண்டி மனைவி, அவரது குழந்தைகளையும் கந்து வட்டி கும்பல் மிரட்டியதாக அவர் மனைவி குற்றம் சாட்டினார்.
இதை தொடர்ந்து ஆருமுகபாண்டி உறவினர்கள் தற்கொலைக்கு தூண்டியவர்களை கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம் மேற்கொண்டனர். லட்சுமி மில் பாலம் அருகே சாலையில அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர், இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது..
மேற்கு போலீசார் நேரில் வந்து அவர்களுடன் பேச்சு நடத்தி சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். ஆறுமுக பாண்டி மரணம் குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடந்த 6 மாதங்களில் கோவில்பட்டி. மேற்கு காவல் நிலையத்தில் பதிவான புகார்கள், அங்குள்ள சிசிடிவி காட்சிகளையும், அந்த புகார்களை விசாரணை நடத்தியவர் தொலைபேசி எண்களையும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு நடத்த வேண்டும் என்று போராட்ட குழுவினர் தெரிவித்தனர்.







