மாற்றுத் திறனாளிகளுக்கான, இல்லம் தேடி சமூக தரவுகள் பதிவு பிரசாரம்
தூத்துக்குடி மாவட்ட ஆட்சிஆட்சியர் கோ.லட்சுமிபதி, மாற்றுத் திறனாளிகளுக்கான இல்லம் தேடி சமூக தரவுகள் பதிவு பிரசார வாகனத்தை தொடங்கி வைத்தார்.
மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் பிரம்ம நாயகம் ஆலோசனையின் பேரில் மாவட்டத்தில் உள்ள முக்கிய இடங்களுக்கு பிரசார வாகனம் சென்ற நிலையில் கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையம் வந்தது.

ஆக்டிவ் மைண்ட்ஸ் அறக்கட்டளை தலைவர் தேன் ராஜா வாகனத்தை வரவேற்று மக்கள் எழுச்சி கலை குழுவினருடன் கரகாட்டம், ஒயிலாட்டம், போன்ற கிராமிய கலை நிகழ்ச்சியுடன் பொது மக்களுக்கு சமூக தரவுகள் பதிவு பற்றி விவரமாக எடுத்துரைத்தனர், பொது மக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கினர். இந்நிகழ்வில் ஆக்டிவ் மைண்ட்ஸ் மேற்பா ர்வையாளர் மாடசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.







