ஷெக்கினா இசைப்பள்ளி நடத்தும் கிறிஸ்துமஸ் பாடல் போட்டி; 18 முதல் 24-ந்தேதி வரை நடக்கிறது
கோவில்பட்டி ஷெக்கினா இசைப்பள்ளியின் சார்பாக, கிறிஸ்துமஸ் பாடல் போட்டிகள் என்ற பெயரில், சர்வதேச அளவிலான ஓர் இசை மற்றும் பாடல் போட்டிகள் நடைபெற உள்ளது.
உலகம் முழுவதும் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட இசை மாணவ, மாணவிகள், இசை ஆர்வலர்கள் கலந்து கொள்கின்றனர். போட்டியில் கலந்து கொள்வோர் ரூ.200 நுழைவு கட்டணம் செலுத்த வேண்டும்.
போட்டியாளர்கள் கீபோர்டு, கித்தார், வயலின், பியானோ, புளுட் , வீணை, டிரம்ஸ், ரிதம் பேட், மிருதங்கம், ஆர்மோனியம் ஆகிய வாத்திய கருவிகளை பயன்படுத்த வேண்டும்.
பாடல்கள்:
O come all ye
Joy to the world
Jingle Bells
we wish you merry Christmas
Bethalayil piranthavarai (தமிழில்)
போட்டியில் பங்கேற்பவர்கள் இந்த 5 பாடல்களையும் இசையுடன் பாட வேண்டும் ரிதம் மாணவர் (டிரம்ஸ், ரிதம் பேட், மிருதங்கம்) ஐந்து பாடல்களுக்கு ஏற்ற தாளம் இசைக்க வேண்டும்.
கோவில்பட்டி ஷெக்கினா இசைப்பள்ளி கிளைகளில் போட்டிகள் நடக்கும். மேலும் உங்கள் அகாடமிக் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் நடக்கிறது. இது தவிர ஆன்லைன் மூலமும் கலந்து கொள்ளலாம்.
வெற்றி பெற்றவர்களுக்கு முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசுகள் வழங்கப்படும்.பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும்.
மேலும் விவரங்கள் தேவைப்படுவோர் உங்கள் இசை ஆசிரியரிடமோ அல்லது 9790026517, 9486110341 ஆகிய அலைபேசி எண்களை தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.
மேற்கண்ட தகவல்களை ஷெக்கினா இசைப்பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.







