கோவில்பட்டியில் மகளிர் உரிமை திட்ட உதவி மையம் ;அமைச்சர் கீதா ஜீவன் பார்வையிட்டார்
கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் குறித்து பெறப்பட்ட விண்ணப்பங்களின் நிலை மற்றும் மேல்முறையீடு செய்வது தொடர்பாக உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த உதவி மையத்தை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் இன்று 23.9.23 பார்வையிட்டார்.
மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், கோவில்பட்டி நகராட்சி தலைவர் கருணாநிதி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் கஸ்தூரி சுப்புராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.







