கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு தி.மு.க.சார்பில் வாஷிங் மெஷின்
கோவில்பட்டியில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெறுபவர்கள் கட்டில் பெட்ஷீட் துணிகள் தினந்தோறும் சுத்தப்படுத்தப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு வசதியாக துணிகளை தூய்மைப்படுத்துவதற்காக கோவில்பட்டி நகர தி.மு.க. சார்பில் புதியதாக நவீன வாஷிங் மெஷின் நன்கொடையாக அளிக்கப்பட்டுள்ளது.
இதன் செயல்பாடு தொடக்கம் இன்று அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. நகர் மன்ற தலைவரும் தி.மு.க. நகர செயலாளருமான கருணாநிதி கலந்து கொண்டு வாஷிங் மெஷின் செயல்பாட்டை தொடங்கி வைத்தார். மருத்துவமனை கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.







