• May 17, 2024

பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி இல்லை; டி.ஜெயக்குமார் அதிரடி

 பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி இல்லை; டி.ஜெயக்குமார் அதிரடி

அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும் , முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை செயல்பாடுகள் சமீப காலமாக சரியில்லை. அண்ணாமலை கூட்டணி தர்மத்திற்கு எதிராக செயல்பட்டு வருகிறார்.. இது பற்றி பா.ஜ.க. மேலிடத்தில் புகார் அளித்துள்ளோம். பல முறை எச்சரித்தும் அண்ணாமலை எங்களை அலட்சியப்படுத்துகிறார்.

எனவே பா.ஜ.க.வுடன் தற்போது அ.தி.மு.க. கூட்டணியில் இல்லை. இது தான் அ.தி.மு.க. கட்சி நிலைப்பாடு. கூட்டணி முறிவால் அ.தி.மு.க.வுக்கு இழப்பு எதுவும் இல்லை. தனித்து நின்றால் நோட்டாவை கூட தாண்ட முடியாதவர் அண்ணாமலை. அ.தி.மு.க.வுக்குள் ஒரு குழப்பமும் இல்லை. தேர்தல் வரும் போது தான் கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும்.

இனிமேல் அண்ணாமலை எங்கள் தலைவர்களை பற்றி விமர்சனம் செய்தால் கடுமையான அளவுக்கு பதில் விமர்சனங்களை சந்திக்க நேரிடும். அண்ணாமலையை அ.தி.மு.க. தொண்டர்கள் தாறுமாறாக விமர்சிப்பார்கள்.

பா.ஜ.க. உடனான கூட்டணி குறித்து தேர்தலின் போது முடிவு செய்வோம். அண்ணாமலையை தேசிய தலைமை தான் இயக்குகிறது. எங்களை விமர்சிக்கும் பா.ஜ.க.வை நாங்கள் ஏன் சுமக்க வேண்டும். அண்ணாமலை தனித்துப்போட்டியில் நோட்டாவுக்கு கீழ் தான் வாக்கு வாங்குவார்.

இவ்வாறு டி.ஜெயக்குமார் கூறினார்.

தொடர்ந்து செய்தியாளர்கள்கேட்ட கேள்விகளும் அதற்கு டி. ஜெயக்குமார் அளித்த பதில்களும் வருமாறு, :-

கேள்வி :-இது உங்களின் தனிப்பட்ட கருத்தா,கட்சியின் கருத்தா?  பதில் :- என்றைக்கும் தனிப்பட்ட கருத்தாக நான் பேசியது கிடையாது. கட்சி என்ன முடிவு எடுக்கின்றதோ அது குறித்துதான் பேசுவேன். கட்சியின் முடிவு என்பது இப்போதைக்கு கூட்டணி கிடையாது.

பொதுச்செயலாளர் தலைமையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திலே கண்டன தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அதற்கு பிறகும் அண்ணாவை விமர்சனம்  செய்வது.பெரியாரை விமர்சனம்  செய்வது,கழக பொதுச்செயலாளரை விமர்சனம்  செய்கிறார் என்றால்  எப்படி நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியும்.

அண்ணாலை விமர்சனம் செய்வதை நாங்கள் டெல்லி தலைமையிடம் சொல்லியிருக்கின்றோம்.மாநில தலைவர்களாக எவ்வளவே தலைவர்கள் இருந்திருக்கிறார்கள். அப்போது இதுபோன்ற பிரச்சனை இருந்ததா?. ஆதி காலத்தில் நடைபெற்றதை இப்போது  தேவையற்ற முறையில் பேசி வருகிறார்.இவர் என்ன தொல்லியல் துறையை சேந்தவரா?தொல்லியல் துறையில் இருக்கவேண்டியவர்.

தகுதி இல்லாத ஒரு தலைவர். நான்கு பேர் சேர்ந்து தலைவர் என்று கத்திவிட்டால் தலை கனம் ஏறிவிடுகிறது. அந்த தலை கனம்தான் இதுபோன்ற முடிவு எடுக்கவேண்டிய நிலை ஏற்படுகிறது.

கேள்வி :-தேசிய தலைவர்கள் ஆதரவோடுதான் அவர் இப்படி பேசுகிறார் என்று நினைக்கின்றீர்களா

பதில்:- எங்களுக்கு இதனை ஆராய்ச்சி செய்யவேண்டிய வேலை இல்லை. எங்களின் முன்னோடிகளை விமர்சனம் செய்வதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். விமர்சனத்திற்கு தக்க பதிலடியை எங்கள் கட்சியினர் கண்டிப்பாக கொடுப்பார்கள். மேலே சொல்லியும் இவர் அடங்கவில்லை என்றால் மேலே சொல்லிதான் நடக்கிறது என்றுதானே அர்த்தம்.இதுபோன்ற நிலையில் எங்களுக்கு இழப்பு இல்லை.உங்களுக்குதான் இழப்பு.பாஜக எங்களுக்கு வேஸ்ட் லக்கேஜ். .அனைவரையும் அரவணைத்து போகவேண்டும் என்பதால் டெல்லியில் தலைவர்களை சந்தித்துவிட்டு வந்தோம்.எதற்கும் ஒரு எல்லை உள்ளது இல்லையா.எப்படி தொண்டர்கள் வேலை செய்வார்கள்.2024 ல் எப்படி தேர்தல் வேலை செய்ய முடியும்.அவர்களால் ஒன்றும் கிழிக்க முடியாது. அண்ணாலையின் பேச்சை அவர்களின் கட்சியினரே ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் கட்சியில் உள்ள மூத்த தலைவர்கள் அனைவரும் இன்றைக்கு சந்தோஷப்படுவார்கள். ஏன் என்றால் மூத்த தலைவர்கள் அனைவரையும் ஓரம் கட்டிவிட்டு ஒன் மேன் ஷோ வாக இருந்தார்.தற்போது தனி மரமாக நிற்பார். எந்த பூச்சாண்டிக்கும் கழகம் பயப்படாது.

கோப்பு,பைல் என்று நாங்கள் எத்தனையோ பார்த்துவிட்டோம். நீங்கள் கோப்பு என்ன என்று தெரியாத ஆளு.அவர் தனியாக நின்று ஓட்டு வாங்க முடியுமா. நோட்டாவைதான் அவர் வெற்றி பெற முடியும். அண்ணாமலையின் விமர்சனங்களை எங்கள் கட்சி தொண்டர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. தோழமையில் இருந்துகொண்டு கூட்டணி தர்மத்தை மதிக்காத ஒரு நிலையில் கூட்டணியில் நீடிக்கவேண்டிய அவசியம் என்ன இருக்கிறது.ஏற்கனவே இதுபோன்று பேசிகொண்டிருந்தால் கூட்டணி குறித்து மறுபரீசிலனை செய்யவேண்டியிருக்கும் என்று குறிப்பிட்டோம்.இப்போது பரிசீலனை செய்து அறிவித்துவிட்டோம்.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பதில் அளித்தார் 

#பா.ஜ.கவுடன் கூட்டணி இல்லை#கூட்டணி#பாஜக – அதிமுக கூட்டணி#அதிமுக கூட்டணி#பா.ஜ.க,நக்கீரன் டிவி#பியூஸ் கோயல்#பிளவும் இல்லை#இந்தி திணிப்பு#பாலிமர் நியூஸ்#பாஜக – அதிமுக உறவில்#இந்தி திணிப்பு விவகாரம்

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *