கோவில்பட்டியில் வ.உ.சி பிறந்தநாள் விழா
விடுதலைப் போராட்ட வீரர் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 152வது பிறந்தநாள் விழா கருத்துரிமை பாதுகாப்புக் கூட்டமைப்பு சார்பாக கோவில்பட்டி சவுபாக்யா மகாலில் கொண்டாடப்பட்டது. கருத்துரிமை பாதுகாப்புக் கூட்டமைப்பின் தலைவர் க.தமிழரசன் தலைமை தாங்கினார். கோவில்பட்டி ரோட்டரி சங்கத்தின் தலைவர் வெங்கடேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
புனித ஓம் கல்வி நிறுவனங்களின் தாளாளர் லட்சுமணப்பெருமாள் மற்றும் சாத்தூர் கலை இலக்கிய பெருமன்றத்தின் தலைவர் ஜெயா ஜனார்த்தனன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தமிழ்ச்செம்மல் கருத்தப்பாண்டி, வழக்கறிஞர் ஜெயஶ்ரீ கிறிஸ்டோபர் கருத்துரை வழங்கினர். ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் டெய்சி பெஞ்சமின் வாழ்த்துரை வழங்கினார்.
கலைமாமணி அமலபுஷ்பம் வ.உ.சி குறித்து பாடல் பாடினார். ஆம்ஸ்ட்ராங் வரவேற்புரையாற்றினார், முனைவர் ஆ.சம்பத்குமார் தொகுத்து வழங்கினார் மற்றும் அருள்தாஸ் நன்றி கூறினார்.
விழாவில் கருத்துரிமை பாதுகாப்புக் கூட்டமைப்பு செயலாளர் வழக்கறிஞர் பெஞ்சமின், நிர்வாகிகள் கருப்பசாமி, கலைச்செல்வன், தாவீது ராஜா, ரோட்டரி துணை ஆளுநர் முத்துச்செல்வம், நாம் தமிழர் கட்சி வழக்கறிஞர் ரவிக்குமார், ஓய்வு பெற்ற நூலக ஆய்வாளர் பூல்பாண்டியன், பகத்சிங் ரத்ததான அறக்கட்டளை காளிதாஸ், லட்சுமணன், மக்கள் நீதி மய்யம் ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு பெண்கள் ஒருங்கிணைப்புக்குழு மேரிஷீலா, தர்மம் வெல்லும் அறக்கட்டளை பூலோகப்பாண்டியன், உரத்த சிந்தனை அமைப்பின் சிவானந்தம், திருவள்ளுவர் மன்றச் செயலாளர் நம்.சீனிவாசன்,வீரத்தியாகி விஸ்வநாததாஸ் கட்சி ஜெயபால், மணிமேகலை, மலர்விழி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.







