கோவில்பட்டி முத்துமாரியம்மன் கோவிலில் வரலட்சுமி விரதம் சிறப்பு பூஜை
கோவில்பட்டி கதிரேசன் கோவில் ரோட்டில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோவிலில் நேற்று வெள்ளிக்கிழமை வரலட்சுமி விரதம் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதனையொட்டி அதிகாலையில் நடை திறக்கப்பட்டு ஸ்ரீ வெற்றி விநாயகர் முத்துமாரியம்மன், சந்தன கருப்பசாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது.
தொடர்ந்து காலை 9 மணிக்கு திருவிளக்கில் வரலட்சுமி அம்மன் முகம் அலங்கரிக்கப்பட்டு கணபதி பூஜையுடன் தொடங்கி, கும்பகலச பூஜை பிரசாத தட்டுகள் வைத்து சிறப்பு தீபாராதனை நடந்தது.. பூஜைகளை கோவில் அர்ச்சகர் சுப்பிரமணி செய்தார். சுற்று வட்டார மக்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு மஞ்சள், குங்குமம், மஞ்சள் சரடு அன்னம் பிரசாதமாக வழங்கப்பட்டது
பூஜைக்கான ஏற்பாடுகளை கோவில் தலைவர் தங்கவேல் செயலார் மாரிச்சாமி பொருளாளர் லட்சுமனன் மற்றும் நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் செய்திருந்தனர்.







