• May 17, 2024

தூத்துக்குடி மாவட்டத்தில் சாலை மேம்பாட்டு திட்டங்களுக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு; கனிமொழி எம்.பி.தகவல்

 தூத்துக்குடி மாவட்டத்தில் சாலை மேம்பாட்டு திட்டங்களுக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு; கனிமொழி எம்.பி.தகவல்

தூத்துக்குடி மாவட்டம் கோரம்பள்ளம் ஊராட்சி வடக்கு காலாங்கரையில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின்கீழ்  ரூ.8 இலட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள பொது விநியோகக் கடை கட்டிடத்தினை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர்  கனிமொழி கருணாநிதி திறந்து வைத்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

: தூத்துக்குடி மாவட்டத்தில் சாலை மேம்பாட்டு திட்டங்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்திருக்கிறார்கள். இந்த நிதியில் ரூ.40 லட்சம் கோரம்பள்ளம் பகுதி மக்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் விரைவில் தொடங்கப்படும். இன்று கோரம்பள்ளம் ஊராட்சி பெரியநாயகிபுரத்தில் ஊராட்சி ஒன்றிய பொது நிதியிலிருந்து ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள பொது விநியோகக் கடை கட்டிடம் மற்றும் வடக்கு காலாங்கரையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.10.19 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள பொது விநியோகக் கடை கட்டிடம் ஆகியவை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

கோரம்பள்ளம் குளம் தூர்வாரும் பணிகளும் நடைபெற்று வருகிறது. வாழை விவசாயிகள் பயன்பெறும் வகையில் இப்பணிகள் விரைவில் முடிக்கப்படும். மேலும், உப்பாறு ஓடை தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளும் விரைவில் முடிக்கப்படும். இப்பகுதியில் சமுதாய நலக்கூடம் வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு எனது பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி முழுமையாக திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டுவிட்டதால் அடுத்த ஆண்டு நிதியில் உங்கள் கோரிக்கை நிறைவேற்றி தரப்படும். மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பல்வேறு நலத்திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது.

தமிழ்நாடு முதலமைச்சர் செப்டம்பர் 15ம் தேதி தேர்தல் வாக்குறுதியான மகளிர் உரிமைத்தொகை திட்டத்தினை தொடங்கி வைத்து நிறைவேற்ற உள்ளார்கள். மேலும், நாளை தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டத்தினை தொடங்கி வைக்கவுள்ளார்கள். இத்திட்டத்தில் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு வகையான சத்தான உணவுகள் வழங்கப்படும்.

அரசு பள்ளிகளில் படித்த மாணவிகளுக்கு உயர் படிப்பிற்காக மாதம் ரூ.1000 வழங்கும் புதுமைப்பெண் திட்டம், இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நான் முதல்வன் திட்டம் என்று ஒவ்வொரு நாளும் மக்கள் பயன்பெறக்கூடிய வகையில் புதிய புதிய திட்டங்களை தமிழ்நாடு முதலமைச்சர் தந்து கொண்டிருக்கிறார்கள். கிராமப்புற மக்களுக்கு அடிப்படை வசதிகளை தொடர்ந்து செய்து தந்து அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக உழைத்துக் கொண்டிருக்கக்கூடிய ஆட்சி தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான ஆட்சியாகும்.

இவ்வாறு கனிமொழி எம்.பி.கூறினார்..

அதனைத்தொடர்ந்து தூத்துக்குடி மாநகராட்சி சாந்திநகரில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ரூ.13 லட்சம் மதிப்பில் பொது விநியோகக்கடை கட்டிடம், மாப்பிள்ளையூரணி ஊராட்சி சிலோன்காலனியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ் ரூ.11.77 லட்சம் மதிப்பில் பொது விநியோகக்கடை கட்டிடம் மற்றும் மாப்பிள்ளையூரணியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.10.13 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி கட்டிடத்தினை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர்  கனிமொழி திறந்து வைத்தார்.

மேலும், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின்கீழ் மாப்பிள்ளையூரணி ஊராட்சி வடக்கு சோட்டையன் தோப்பில் ரூ.10இலட்சம் மதிப்பில் பல்நோக்கு கட்டிடம் மற்றும் பூப்பாண்டியாபுரத்தில் ரூ.12.30 லட்சம் மதிப்பில் பொது விநியோகக்கடை கட்டிடத்திற்கு  தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர்  கனிமொழி கருணாநிதி அடிக்கல் நாட்டினார்.

நிமேற்கண்ட நிகழ்ச்சிகளில் மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பெ.ஜெகன், கூடுதல் ஆட்சியர் வளர்ச்சி தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் துணை ஆட்சியர் (பயிற்சி) பிரபு, தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் வசுமதி, குடிமைப்பொருள் வழங்கல் வட்டாட்சியர் ஜாண்சன், தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஹெலன் பொன்மணி (வ.ஊ), வசந்தா (கி.ஊ), மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்றத்தலைவர் ஆர்.சரவணக்குமார், தூத்துக்குடி ஊராட்சி ஒன்ற்pய உறுப்பினர் ஆனந்தகுமார் மற்றும் அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *