அண்ணா பிறந்தநாள் மாநாடு; ம.தி.மு.க. சார்பில் ஆட்டோ பிரசாரம் தொடக்கம்
பேரறிஞர் அண்ணாவின் 115வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு ம.தி.மு.க. சார்பில் மதுரையில் செப்டம்பர் 15ந்தேதி மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாடு குறித்து பொதுமக்களுக்கும், கட்சி தொண்டர்களுக்கும் தெரிவிக்கும் வகையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நகர ம.தி.மு.க சார்பில் ஆட்டோ பிரசாரம் தொடங்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆட்டோவிலும் மாநாடு தொடர்பான போஸ்டர்கள் ஓட்டும் மற்றும் பிரசாரம் தொடக்க நிகழ்ச்சி கோவில்பட்டி கூடுதல் பஸ் நிலையம் முன்பு நடைபெற்றது. மாநாட்டு போஸ்டர்கள் ஒட்டிய ஆட்டோ பிரச்சாரத்தை ம.தி.மு.க. நகர செயலாளர் பால்ராஜ் தொடங்கி வைத்தார். 115 ஆட்டோக்கள் மூலமாக கோவில்பட்டி நகர் முழுவதும் ஆட்டோ பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது.
நிகழ்ச்சியில் நகர இளைஞர் அணி செயலாளர் முத்துகிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதிகள் ராஜேஷ், மாரிமுத்து, நகர மாணவரணி செயலாளர் கார்த்திக் வார்டு செயலாளர் உட்பட மதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.







