• May 17, 2024

அ.தி.மு.க. மாநாட்டுக்கு போதிய போலீஸ் பாதுகாப்பு அளிக்கவில்லை; டி.ஜி.பி.யிடம் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புகார் மனு

 அ.தி.மு.க. மாநாட்டுக்கு போதிய போலீஸ் பாதுகாப்பு அளிக்கவில்லை; டி.ஜி.பி.யிடம் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புகார் மனு

கடந்த 20 ஆம் தேதி மதுரையில் நடைபெற்ற அ.தி.மு.க. வீர வரலாற்று எழுச்சி மாநாட்டிற்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க கோரி உயர் நீதிமன்றம் உத்தரவு அளித்த பின்னும் காவல்துறை அதிகாரிகள் போதிய பாதுகாப்பு அளிக்காதது குறித்து தமிழ்நாடு காவல்துறை தலைவர் (டி.ஜி.பி.). சங்கர் ஜிவாலை நேரில் சந்தித்த அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், உயர் நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் செயல்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு அளித்தார். அப்போது அ.தி.மு.க .வக்கீல் அணியினர் உடன் இருந்தனர்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த டி.ஜெயக்குமார் கூறியதாவது:-

கடந்த 20 ஆம் தேதி அன்று மதுரையில் நடைபெற்ற அ.தி.மு.க. வீர வரலாற்று பொன்விழா எழுச்சி மாநாட்டிற்கு கழக தொண்டர்கள், பொது மக்கள் என சுமார் 15 முதல் 20 லட்சம் நபர்கள் கலந்து கொண்டனர், 40,000 ஆயிரம் வாகனங்கள், 15 முதல் 20 லட்சம் நபர்கள் வருகை தர இருக்கும் நிலையில் முன்னதாக மாநாட்டிற்கு கூடுதல் பாதுகாப்பை வழங்க கோரி மனு அளிக்கபட்ட நிலையில் அதற்கு காவல் துறையும் ஒப்புதல் அளிக்கபட்டதை தொடர்ந்து உயர் நீதிமன்றமும் உத்தரவு பிறப்பித்து இருந்தது,

ஆனால் மாநாடு நடைபெற்ற அன்று போதிய போலீசார் பாதுகாப்பு பணியில் இல்லை, போக்குவரத்து போலீசாரும் குறையவாக இருந்த நிலையில் கடும் போக்குவரத்து நெரிசலை சந்திக்க நேரிட்டது. முதல்வர் ஸ்டாலின் பேச்சை கேட்டு உயர் நீதிமன்ற உத்தரவை மீறி பாதுகாப்பு பணியில் ஈடுபடாத காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி டி ஜி பி யிடம் புகார் அளித்து இருக்கிறோம்.

கேள்வி: அ.தி.மு.க. மாநாட்டில் உணவுகள் வீணாக கொட்டப்பட்டது குறித்து ….?

பதில்:- லட்சக்கணக்கான மக்கள் வரும் நிலையில் முன்னதாக உணவுகள் தயார் செய்யப்பட்டன, இவ்வளவு மீதமாகும் என எதிர்பார்க்கப்படவில்லை, இதை அனுபவமாக கொண்டு எதிர்காலத்தில் இனி அந்த தவறு நடைபெறாது .

கேள்வி:- நீட் தேர்வினை ரத்து செய்ய டெல்லி சென்று தன்னுடன் போராட்டம் நடத்த தயாரா என அ.தி.மு.க.வை உதயநிதி ஸ்டாலின் போராட்டத்திற்கு அழைத்துள்ளாரே?

பதில்:- உண்ணாவிரத போராட்டத்தில் தந்தையைப் போலவே மகன் உதயநிதி ஸ்டாலினும் நன்றாக நடிக்கிறார், சூர்சுமம் தெரியும் என்று மக்களை ஏமாற்றி வருவதாகவும், நீட்டுக்கு விதை போட்டுவிட்டு இன்று நாடாளுமன்ற தேர்தலுக்காக நீட்டை கையில் எடுத்து உள்ளனர், முன்னதாக டெல்லி சென்ற உதயநிதி ஸ்டாலின் பிரதமரை சந்தித்தபோது நீட் தேர்வை ரத்து செய்வது குறித்து அழுத்தம் கொடுத்தாரா? காவேரி பிரச்சனையின் போது அதிமுக மத்திய அரசை  ஸ்தம்பிக்க வைத்தது, இன்று ஆட்சி அதிகாரம் கையில் வைத்து கொண்டு ஏன் அவர்களால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை.

ஆட்சியில் அமர்ந்த 2 ஆண்டு காலத்தில் நீட் குறித்து யாரை சந்தித்து உள்ளார்கள் ? அ.தி.மு.க. ஒரு இமயம், தி.மு.க. போன்று கொத்தடிமை கிடையாது, தமிழகத்திற்கு இதுவரையில் என்ன செய்துள்ளார்கள், கச்ச தீவு என்றாலே திமுகவினர் ஓடிவிடுவார்கள், பணத்தை நோக்கிய என்னம் மட்டுமே அவர்களுக்கு உள்ளது,

கருணாநிதி மற்றும் ஸ்டாலினால்  விட்டு கொடுக்கப்பட்ட தமிழக உரிமைகளை மீட்டு எடுத்கும் இயக்கம் தான் அ.தி.மு.க.

ஓ. பன்னீர்செல்வம் , மாவட்ட செயலாளர் கூட்டம் கூட்டி இருக்கிறாரே? :-

பதில்:- கட்சி இல்லாத ஒருவார் மாவட்ட செயலர் கூட்டத்தை நடத்துகிறார், அதை பெரிதாக்க தேவை இல்லை, அவர் ஒரு கஞ்சர்

கேள்வி:- ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்:- அரசியலுக்கு யார் வேண்டும் என்றாலும் வரலாம் ஆனால் மக்கள் அங்கீகரிக்க வேண்டும் டி. ஜி. பி. இடம் இன்று வழங்கப்பட்ட புகார் மனு மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் .

இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பதில் அளித்தார்.  

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *