கோவில்பட்டியில் கால்நடை மருத்துவமனை; அமைச்சர் கீதா ஜீவன் திறந்து வைத்தார்
கோவில்பட்டி எட்டயபுரம் சாலையில் நபார்டு வங்கி உதவியுன் ரூ.60.50 ;லட்சம் செலவில் கால்நடை மருத்துவமனை கட்டிடம் புதிதாக கட்டப்பட்டு உள்ளது.
இந்த மருத்துவமனை திறப்பு விழா நேற்று மாலை நடைபெற்றது.அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்து மருத்துவமனையை சுற்றி பார்த்தார்.

இந்த நிகழ்ச்சியில் நகராட்சி தலைவர் கருணாநிதி, கால்நடைத்துறை இணை இயக்குனர் டாக்டர். சஞ்சீவி ராஜ் மற்றும் அதிகாரிகள், கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்,
இனாம் மணியாச்சி இ.பி.காலனி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.28 லட்சம் மதிப்பில் கூடுதல் கட்டிடம், ரூ.8 லட்சம் செலவில் சமையல் கூடம் ஆகியவற்றையும் அமைச்சர் கீதா ஜீவன் திறந்து வைத்தார்.







