476 மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி
கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசு சார்பில் மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி தலைமையில் நடைபெற்றது. இடைநிலை பிரிவு கோவில்பட்டி கல்வி மாவட்ட அலுவலர் ஜெயபிரகாஷ் ராஜன், மாவட்ட தொடக்க கல்விஅலுவலர் சுப்பாராஜ், ஆகியோர் முன்னிலை வகித்தனர். . கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கருணாநிதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 476 மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் உதவி திட்ட அலுவலர் முனியசாமி, நகர்மன்ற உறுப்பினர்கள் சித்ராதேவி, உலக ராணி, பள்ளி மேலாண்மை குழு தலைவர் ரெங்கம்மாள், உறுப்பினர்கள் முத்துமுருகன், கோமதிநாயகம், கௌரி, ராஜ் குமார், உள்பட ஆசிரியர்கள், மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். தொடக்கத்தில் பள்ளி தலைமையாசிரியை ஜெயலதா அனைவரையும் வரவேற்றார் முடிவில் உதவி தலைமை ஆசிரியை உஷா ஜோஸ்பின் நன்றி கூறினார்.







