கோடைகால ஆக்கி பயிற்சி முகாமில் கலந்து கொண்ட வீரர்களுக்கு சான்றிதழ்
கோவில்பட்டி இலுப்பையூரணி ஆக்கி கிளப் சார்பில் கோடைகால ஆக்கி பயிற்சி முகாமில் கலந்து கொண்ட வீரர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது இலுப்பையூரணி பஞ்சாயத்து தலைவர் செல்வி சந்தானம். ஆக்கி யூனிட் ஆஃப் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் முனைவர் குருசித்திர சண்முக பாரதி தலைமையில் அரசு அக்குபஞ்சர் மருத்துவர் திருமுருகன் மற்றும் தொழிலதிபர் பாண்டி முன்னிலையில் வேல்ஸ் வித்யாலயா பள்ளி தாளாளர் நாகமுத்து சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

அவர் 25 நாட்கள் நடைபெற்ற பயிற்சி முகாமில் கலந்து கொண்ட 45 வீரர் வீராங்கனைகளுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கி சிறப்பித்தார். பயிற்சியாளர்கள் சுப்புராஜ் தங்க மாரியப்பன்,, செந்தில் அந்தோணிச்சாமி ஆகியோருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. இலுப்பையூரணி ஆக்கி கிளப் பொறுப்பாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, ராஜ மனோகர், மாடசாமி, ரமேஷ், மார்ட்டின், ராதாகிருஷ்ணன், சரவணன் ஆகியோர் பயிற்சி முகாம் மற்றும் நிறைவு விழாவுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.








