அருந்ததியர் சமூக மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா கோரி மனு
தூத்துக்குடி மாவட்ட ஆதி தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் நம்பிராஜ் பாண்டியன் தலைமையில் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. துணை செயலாளர்கள் முத்துசாமி, பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் அருந்ததி சந்திரன், தலைவர் காளிமுத்து, ஒன்றிய செயலாளர் முத்துக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்ட முடிவில் கோட்டாட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:-
தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக ஆதி தமிழர் கட்சி பாடுபட்டு வருகிறது. கொவிலப்ட்டி ஆதி திராவிடர் நலத்துறை, தனி வட்டாட்சியர் அலுவலகம் சார்ந்து கோவில்பட்டி, எட்டயபுரம், கயத்தார் ஆகிய தாலுகா அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன,’
இந்த தாலுகாக்களுக்கு உட்பட்ட கிராமங்களான ஊத்துப்பட்டி, தீத்தாம்பட்டி, அச்சன்குளம், செவல்பட்டி, கொ.தீத்தாம்பட்டி, புங்கவர் நத்தம். காமநாயக்கன்பட்டி, படர்ந்தபுளி, துரைச்சாமிபுரம், ஆகிய கிராமங்களில் வாழும் அருந்ததியர் சமூக மக்களுக்கு வீட்டுமனை இல்லாத குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழக வேண்டும் என்று கடந்த 2.1.2023 அன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
இந்த மனு மீது இன்னும் நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது. ஆகவே வீட்டுமனை இல்லாத அருந்ததியர் சமூக தொழிலாளர்கள் கொடுத்த மனுக்கள் மீது விசாரணை நடத்தி காலதாமதம் செய்யாமல் இலவச வீட்டுமனை பட்டா வழங்கிட வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்/
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.