மாணவ, மாணவி களுக்கான கோடைகால ஆக்கி பயிற்சி முகாம்
ராஜீவ் காந்தி விளையாட்டு கழகத்தின் சார்பாக மாணவர்களுக்கான கோடைகால ஆக்கி பயிற்சி முகாம் கோவில்பட்டி வ. உ. சி. அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்றது
இந்த பயிற்சியில் 35 வீரர்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர். பயிற்சியின் போது தினமும் காலையும் மாலையும் முட்டை,பால் வழங்கப்பட்டது
பயிற்சி முகாமின் நிறைவு நாளான இன்று மாலை வ உ சி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சுரேஷ், உதவி தலைமை ஆசிரியர் அந்தோணி ராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வீரர்களுக்கு சான்றிதழ் மற்றும் சீருடை வழங்கினார்கள்.
நிறைவு விழாவில் ஆக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி, பொதுச்செயலாளர் முனைவர் குருசித்திர சண்முக பாரதி தலைமையில் தேசிய ஆக்கி நடுவர் முருகன், உடற்கல்வி ஆசிரியர் சுரேஷ்குமார், மூத்த ஆக்கி வீரர் எட்டு ராஜ் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

பயிற்சி முகாமில் பயிற்சி அளித்த பயிற்சியாளர்கள் பிரேம்குமார் மகேஷ் குமார் ஆகியோருக்கு நினைவு பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது பயிற்சி முகாமிற்கான ஏற்பாடுகளை வேல்முருகன், சதீஷ் குமார்,முகேஷ் குமார், ஜெகதீஸ்வரன், கார்த்திக் ராஜா, அருண்குமார் கவின், கஜேந்திரன் ஆகியோர் செய்திருந்தனர்







