கோவில்பட்டியில் புகையிலை எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணி; டாக்டர்கள் நடந்து சென்றனர்
கோவில்பட்டியில் இந்திய மருத்துவர்கள் சங்கம், ரோட்டரி சங்கம், ஜே.சி.ஐ. ஆகியவை சார்பில் உலக புகையிலை எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணி நேற்று மாலை நடத்தப்பட்டது.
மாலை 4 மணி அளவில் கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு நகரில் உள்ள தனியார் மற்றும் அரசு மருத்துவமனை டாக்டர்கள் வரத்தொடங்கினார். மேலும் பயிற்சி டாக்டர்கள், நர்ஸ்கள், கல்லூரி மாணவ, மாணவிகள், ஜே. சி. ஐ. உறுப்பினர்கள் குவிந்தனர்.

பேரணிக்கு இந்திய மருத்துவர்கள் சங்க கோவில்பட்டி கிளை செயலாளர் டாக்டர் சிவ நாராயணன் தலைமை தாங்கினார். கோவில்பட்டி ரோட்டரி சங்க தலைவர் ரவி மாணிக்கம், இந்திய மருத்துவர்கள் சங்க கோவில்பட்டி கிளை தலைவர் டாக்டர் மதனகோபால், கோவில்பட்டி ஜே.சி.ஐ தலைவர் தீபன் ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ரோட்டரி மாவட்டத் துணை ஆளுநர் ஆசியா பார்ம்ஸ் பாபு அனைவரையும் வரவேற்றார்.
இந்திய மருத்துவர்கள் சங்க கோவில்பட்டி கிளையின் மூத்த டாக்டர் என்.டி.சீனிவாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடக்கி வைத்தார்.
டாக்டர்கள் சி.கே சிதம்பரம், செல்வராஜ், கோமதி, கமலா மாரியம்மாள், பூவேஸ்வரி, லதாவெங்கடேஷ், சுஜாதா, ஆத்மிகா, சஞ்சய், ரோட்டரி மாவட்ட தலைவர் விநாயகா ரமேஷ், பாபு, சீனிவாசன், முத்துச்செல்வம், எஸ் எஸ் டி எம் கல்லூரி செயலாளர் கண்ணன், ரோட்டரி சங்க செயலாளர் மணிகண்ட மூர்த்தி, ஜே. சி.ஐ.செயலாளர் சூர்யா, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
எஸ்.எஸ்.டி.எம் கல்லூரி, நேஷனல் என்ஜினியரிங் கல்லூரி, ஜி.வி. என். கல்லூரி, சொர்ணா நர்சிங் கல்லூரிகளை சேர்ந்த 400க்கும் மேற்பட்ட மாணவர்களும், இந்திய மருத்துவர்கள் சங்க மருத்துவர்களும், பல் மருத்துவர்களும், ரோட்டரி சங்க உறுப்பினர்கள், ஜே.சி.ஐ சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்



கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பிருந்து பேரணி புறப்பட்ட்து. பேரணியில் பங்கேற்ற டாக்டர்கள் உள்பட அனைவரும் நடந்து சென்றனர். புகையிலை எதிர்ப்பு வாசகங்கள் இடம் பெற்ற பதாகைகள் ஏந்தி சென்றனர்.
மெயின்ரோடு,மாதாங்கோவில் ரோடு, கதிரேசன் கோவில் ரோடு, ஏ கே எஸ் தியேட்டர் ரோடு வழியாக மீண்டும் பயணியர் விடுதியை வந்தடைந்தனர். முடிவில் இந்திய மருத்துவர்கள் சங்க கோவில்பட்டி கிளை பொருளாளர் டாக்டர் பாலமுருகன் நன்றி கூறினார்.







