கோவில்பட்டியில் ரெயில் மறியலில் ஈடுபட முயன்ற காங்கிரசார் கைது
ராகுல்காந்தியின் எம்.பி.பதவி ரத்து செய்யப்பட்டதை கண்டித்து கோவில்பட்டியில் ரெயில் மறியல் நடத்தபோவதாக காங்கிரசார் அறிவித்து இருந்தனர், அதன்படி இன்று ரெயில் நிலையம் முன்பு தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் முன்னாள் மாநில பொது குழு உறுப்பினர் பொன்னுசாமி பாண்டியன் தலைமையில் காங்கிரசார் குவிந்தனர்.
கோவில்பட்டி நகர காங்கிரஸ் தலைவர் அருண்பாண்டியன், வட்டார தலைவர் ரமேஷ் மூர்த்தி ஆகியோர் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ரெயில் நிலியம் முன்பு அமர்ந்து கோஷம் எழுப்பினார்கள். மாநில பொது குழு உறுப்பினர் மகேஷ்குமார், திருப்பதி ராஜா,மாவட்ட செயலாளர் துரை ராஜ் , மாவட்ட பொது செயலாளர் ராஜாசேகரன் மாவட்ட துணை தலைவர் முத்து, மாவட்ட செயலாளர் ஜோஷ்வா, sc /st பிரிவு மாநில துணை தலைவர் மாரிமுத்து, மாநில செயலாளர் மரியவினோல,தர்மர், பிரபாகரன், பழனிசாமி, நல்லமதி,தட்சணாமூர்த்தி, ஈராட்சி பாலமுருகன், ஆனந்த், முருகன், மாரியப்பன் திட்டன்குளம் காமராஜ், பிச்சை கனி, கோபால், செல்லையா, அருணாச்சலம், மாடசாமி, மணி,பலவேசம், மாரியப்பன், பிரபு, சுடலைமணி, பாலாமுருகன், ஜான்சன், கொம்பையா, ஆறுமுகம் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்
சிறிது நேரம் கழித்து அவர்கள் ரெயில் மறியல் செய்வதற்காக ரெயில் நிலையத்துக்குள் செல்ல முற்பட்டனர். அவர்களை போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர்,. தனியார் மண்டபத்தில் வைக்கப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.







