கோவில்பட்டி அருகே பொன்னேர் திருவிழா
கோவில்பட்டி அருகே எட்டயபுரம் ஒன்றியம் பா.ஜனதா விவசாய அணி சார்பாக தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு பொன்னேர்திருவிழா நடத்தப்பட்டது, மேல ஈரால் கிராமத்தில் 10-க்கும் மேற்பட்ட டிராக்டர்கள் வைத்து விவசாய நிலத்தில் உழுது நடந்தது.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட பா.ஜனதா பார்வையாளர் போத்தீஸ் ராமமூர்த்தி தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் சரவண கிருஷ்ணன், விவசாய அணி கோட்ட பொறுப்பாளர் சுரேஷ்குமார், விவசாய அணி மாவட்ட தலைவர் மருதையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆன்மிக பிரிவு மாவட்ட தலைவர் ராம்கி மற்றும் மாவட்ட துணைத் தலைவர் ஆதி ராஜ், இளைஞரணி மாவட்ட தலைவர் தினேஷ் ரோடி, ஒன்றிய மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு பொன்னேர்திருவிழாவை நடத்தினர். ஊடகபிரிவு மாவட்ட தலைவர் அம்மன் மாரிமுத்து நன்றி கூறினார்.
கோவில்பட்டி செண்பகவல்லிம்மன் பூவனநாத சுவாமி தகோயிலில் சித்திரை தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பக்தர்களுக்கு மாவட்ட பா,ஜனதா தலைவர் வெங்கடேசன் சென்னகேசவன் பொங்கல் வழங்கி சிறப்பித்தார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அரசு தொடர்பு பிரிவு நகரத் தலைவர் வெள்ளைச்சாமி செய்திருந்தார் நிகழ்ச்சியில் மாநில செயலாளர் ராமகிருஷ்ணன் ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் அம்மன் மாரிமுத்து அரசு பிரிவு நிர்வாகிகள் நகர ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்,







