மானிய விலையில் டீசல், பெட்ரோல்,கியாஸ் கேட்டு ஆட்டோ தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கோவில்பட்டி ஏ.ஐ.டி.யு.சி.ஆட்டோ தொழிற்சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் இன்று கலை நடைபெற்றது. கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு ஏ.ஐ.டி.யு.சி.ஆட்டோ தொழிற்சங்க மாவட்ட தலைவர் பாபு தலைமை தாங்கினார். வட்டார செயலாளர் ஐயப்பன், வட்டார தலைவர் முனியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் சரோஜா, மாவட்ட குழு பரமராஜ், செல்லையா, ஜோசப், ரஞ்சனி கண்ணம்மா,நிர்வாக குழு சேதுராமலிங்கம், நகர குழு சண்முகவேல், ராஜ், விஜயலட்சுமி, செந்தில் ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்,.
ஆர்ப்பாட்டத்தின் போது வலியுறுத்திய கோரிக்கைகள் விவரம் வருமாறு:-
*காவல்துறை மற்றும் வட்டார போக்குவரத்து துறையினர் ஆன்லைன் அபராதத்தை கைவிடவேண்டும்.
*வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஊழல்களை தடுத்து நிறுத்த வேண்டும்.,
*ஆட்டோ தொழிலை, தொழிலாளர்களை பாதிக்கும் மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும்.
*தமிழகத்தில் ஆட்டோ ஓட்டுவதற்கான செயலியை உருவாக்கு. மக்களின் பயண சேவையை பூர்த்தி செய்.
*ஆட்டோ தொழிலில் ஏற்படும் பிரச்ச்சினைக்கு தீர்வுக்கான மாவட்டம் தோறும் முத்தரப்பு குழுவை அமைத்திடு.
*மானிய விலையில் பெட்ரோல், டீசல், கியாஸ் வழங்கிடு.
* ஆட்டோ தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் ரூ. 9 ஆயிரம் வழங்கிடு.
மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.







