கோவில்பட்டி பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
கோவில்பட்டி செண்பகவல்லி உடனுறை பூவனநாதசுவாமி கோவில் பங்குனி உத்திர திருவிழா,, மிக முக்கியமான திருவிழாவாகும்.
ஒவ்வொரு ஆண்டும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது,. இந்த ஆண்டு பங்குனி உத்திர திருவிழா இன்று 5-ந்தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி நந்தியம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது, தொடர்ந்து தீபாராதனை நடைபெற்றது.\
ஒவ்வொரு நாளும் கோவிலில் சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடைபெறும். 15-ந் தேதி வரை திருவிழா நடக்கிறது.

விழாவின் முக்கிய அம்சமாக தேரோட்டம், 13-ந்தேதியும், தீர்த்தவாரி 14-ந்தேதியும், தெப்ப திருவிழா 15-ந்த்தேதியும் நடைபெறுகிறது.
10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழா , மக்களுக்கு பக்தி மட்டுமின்றி பொழுதுபோக்கு நாட்களாகவும் இருக்கும்.அந்த வகையில் கோவில் மைதானத்தில் விதவிதமான ராட்டினங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சிறுவர்களை கவரும் வகையில் விளையாட்டு பொருட்கள், பொம்மைகள் விற்பனை செய்யும் திடீர் கடைகள் நிறைய உருவாகி உள்ளன.
.







