கொரோனா காலத்தில் பணியாற்றிய தற்காலிக செவிலியர்கள் நிரந்தர பணியாளர் ஆக்கப்படவேண்டும்; கடம்பூர் ராஜு வலியுறுத்தல்
அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சர் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு விளாத்திகுளத்தில் நிருபர்களுக்கு அளித்த பெட்டியின் போது கூறியதாவது:-
கொரோனா காலகட்டத்தில் அ.தி.மு.க. ஆட்சியின் போது அவசர நிலை கருதி மக்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் செவிலியர் பயிற்சி பள்ளியில் படித்த செவிலியர்கள் தற்காலிகமாக பணியமர்த்தப்பட்டார்கள்
எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி தொடர்ந்திருந்தால் அவர்கள் நிரந்தர பணியாளர்களாக பணிநியமனம் செய்யப்பட்டு இருப்பார்கள் அவர்கள் பணி என்பது தலையாய மகத்துவமான பணி கொரோனா காலகட்டத்தில் தங்கள் இன்னுயரையும் கருதாமல் மக்களுக்கு பணியாற்றியவர்கள்
எனவே அரசியல் பாகுபாடு பார்க்காமல் தற்காலிக பணியாளர்களாக நியமிக்கப்பட்ட செவிலியர்கள் அனைவரையும் தற்போதைய அரசு, நிரந்தர பணியாளர்களாக ஆக்க வேண்டும்
ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து கருத்து கேட்பதற்கு சட்டத்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பியதில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி என்று தெரிவித்துள்ளது
அ.தி.மு.க. பொதுக்குழு குறித்து உச்ச நீதிமன்றத்தில் இறுதி கட்ட விசாரணை நடைபெற்று வருகிறது விரைவில் நல்ல தீர்ப்பும் வர உள்ளது அதன் பிறகு இப்பிரச்சனைகள் எல்லாம் நிறைவு பெற்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி என்று நிலைநிறுத்தப்படும்
அந்த நேரத்தில் தேர்தல் கமிஷன் அ.தி.மு.க. நிலையை ஏற்று ஒரே இயக்கமாக செயல்படும்
அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் பொள்ளாச்சியில் நடைபெற்ற ஒரு சம்பவத்தை மையப்படுத்தி தமிழகம் முழுவதும் சென்று கனிமொழி எம்பி பேசி வந்தார்… அப்போதைய அ.தி.மு.க. அரசு பாரபட்சம் பார்க்காமல் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுத்தோம்
அந்த ஒரு சம்பவத்தை வைத்து 2021 இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் மையக் கருத்தாக அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று பிரசாரம் செய்தனர்

சென்னை விருகம்பாக்கத்தில் கனிமொழி எம்.பி. பங்கேற்ற கூட்டத்திலேயே பெண்ணுக்கு தி.மு.க. நிர்வாகிகள் பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் அரங்கேறி உள்ளது
கடந்த இரண்டு ஆண்டுகளில் சிறுமிகள் பெண்களுக்கு என பாலியல் குற்றச் சம்பவம் அதிகரித்துள்ளது அதனை கட்டுப்படுத்த தற்போதைய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை
பெண்கள் பாலியல் குற்றச் சம்பவங்களுக்கு உள்ளவாது அன்றாட நிகழ்வாக நடந்து வருகிறது
கட்சியில் யார் தவறு செய்தாலும் அவர்கள் மீது உரிய புகார் அளித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் அவர்கள் நடவடிக்கை எடுப்பார்களா என்பது சந்தேகம் தான் .
இவ்வாறு கடம்பூர் ராஜு தெரிவித்தார்







