கோவில்பட்டி நகர இளைஞர் அணி உறுப்பினர் படிவம்; உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது

தூத்துக்குடியில் இல்லந்தோறும் இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. முகாமை மாநில இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தொடக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியின்போது கோவில்பட்டி நகர இளைஞர் அணி உறுப்பினர் படிவத்தை உதயநிதி ஸ்டாலினிடம் கோவில்பட்டி நகர இளைஞர் அணி அமைப்பாளர் கா.மகேந்திரன் வழங்கினார். அப்போது நகர செயலாளர் கா.கருணாநிதி உடன் இருந்தார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கீதா ஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோரும் கலந்து கொண்டனர்,
