தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம்,24 ம் தேதி நடக்கிறது
தி.மு.க.வில் உறுப்பினர்கள் சேர்க்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் மாவட்டம் வாரியாக செயல்வீரர்கள் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நாலாட்டின்புதூர் கோகுலம் திருமண்டபத்தில் வரும் 24 ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. இதற்கு வடக்கு மாவட்ட பொறுப்பாளரும், அமைச்சருமான கீதாஜீவன் தலைமை தாங்குகிறார். தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கலந்து கொண்டு பேசுகிறார்.
இந்த கூட்டத்தில் சம்பந்தப்பட்ட ஒன்றிய கழகத்திற்கு உட்பட்ட கிளைக் கழகச் செயலாளா்கள், பிரதிநிதிகள், கழகத் தோழா்கள் அனைவரும் இதனையே அழைப்பாக ஏற்று கலந்து கொள்ள கேட்டுக்கொள்கிறேன் என்று மாவட்ட பொறுப்பாளரான கீதாஜீவன் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.







