• November 16, 2026

Month: October 2026

தூத்துக்குடி

தூத்துக்குடியில் லாட்டரி சீட்டுகள் விற்றதாக 7 பேர் கைது

தூத்துக்குடி தெற்கு காவல் நிலைய போலீசார் மேற்கொண்ட தீவிர சோதனையில், சட்டவிரோதமாக லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்ட ஆன்ஸ்டன் (42), நவீன்ராஜா (26), சூர்யா (25), நாராயணசாமி (40), கோபிகண்ணன் (36), கண்ணன் (37) மற்றும் டெல்லிபாபு (30) ஆகிய ஆகிய 7 பேர் கைது செய்யப்பட்டனர். சோதனையின்போது அவர்களிடமிருந்து மொத்தம் 11 செல்போன்கள், 3 இருசக்கர வாகனங்கள் மற்றும் ரூபாய் 77,300/- ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. எதிரிகள் மீது Lottery Regulation Act-ன் கீழ் வழக்குப்பதிவு […]

கோவில்பட்டி

கோவில்பட்டி பெருமாள் கோவிலில் புரட்டாசி சனி சிறப்பு பூஜை

கோவில்பட்டி வணிக வைசிய சமுதாயத்துக்கு பாத்தியப்பட்டதனுஷ்கோடிபுரம் தெருவில் உள்ள ஸ்ரீஅலமேலுமங்கா பத்மாவதி தாயார் சமேத வெங்கடேச பெருமாள் சன்னதியில் புரட்டாசி மாத சனி சிறப்பு பூஜை நடைப்பெற்றது. இதனையொட்டி பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடை பெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பஜனை பாடல்கள் பாடினர்.பூஜைகளை சுப்பிரமணியசாமி செய்தார். கோவில் தலைவர் வெங்கடேஷ், செயலாளர் வேல்முருகன், பொருளாளர் தங்கமாரியப்பன், நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் […]

தூத்துக்குடி

தூத்துக்குடியில் கடல்நீரை நன்னீராக்கும் திட்டத்திற்கு மீனவர்கள் எதிர்ப்பு -போராட்டம்

தூத்துக்குடி முள்ளக்காடு பகுதியில் நாளொன்றுக்கு 60 மில்லியன் லிட்டர் கொள்ளளவு கொண்ட கடல்நீரை நன்னீராக்கும் திட்டத்திற்கான ஆலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த ஆலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீராலும், கடல் பகுதியில் மேற்கொள்ளப்படும் கட்டுமானங்களாலும் கடற்கரையையொட்டி பாரம்பரியமாக செய்யப்படும் ‘கரைவலை’ மீன்பிடித் தொழில் முற்றிலும் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், இதனால் கடல்வளம் மற்றும் மீன்வளம் கடுமையாக பாதிக்கப்படும் என மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். கடந்த சில நாட்களாக கடலில் […]

கோவில்பட்டி

நவராத்திரி விழா நாளை தொடக்கம்; கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் தினமும் லட்சார்ச்சனை

தெய்வீகப் பெண்தன்மையை கொண்டாடும் நவராத்திரி திருவிழா நாளை அக்டோபர் 11 முதல் 19 வரை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. நவராத்திரி என்றால் 9 இரவுகள் என்று பொருள். அமாவாசையை அடுத்து வரும் 9 நாட்கள் நவராத்திரி எனப்படுகிறது. சந்திர சுழற்சியின் முதல் 9 நாட்கள் பெண் தன்மையாக கருதப்படுகிறது.  தெய்வீகத்தின் பெண் தன்மையாகக் கருதப்படும் தேவிக்கு, இது மிகச் சிறப்பான நேரம். 9 வது நாள் நவமி என்று வழங்கப்படுகிறது. பவுர்ணமியை ஒட்டிய ஒன்றரை நாட்கள் சமநிலையான […]

செய்திகள்

அதிகார பலம் முழுவதையும் இடைத்தேர்தலுக்காக தவறாக பயன்படுத்தியது த.வெ.க. அரசு; மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:- நடந்து முடிந்த மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களித்த வாக்காளப் பெருமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இரண்டு தொகுதியிலும் மிகக்கடுமையாகத் தேர்தல் பணியாற்றிய தொண்டர்கள், முன்னணியினர், உடன்பிறப்புகள், கூட்டணிக் கட்சியின் தலைவர்கள் ஆகிய அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். சட்டமன்றத் தேர்தல் முடிந்த ஐந்தே மாதத்தில் […]

செய்திகள்

மதுராந்தகம்,தாராபுரம் தொகுதிகளில் தவெக வெற்றி; அதிமுகவுக்கு 3-ம் இடம்

தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 234 சட்டசபை தொகுதிகளில் மதுராந்தகம் (செங்கல்பட்டு மாவட்டம்), தாராபுரம் (திருப்பூர் மாவட்டம்), கரூர் (கரூர் மாவட்டம்), விராலிமலை (புதுக்கோட்டை மாவட்டம்), பெருந்துறை (ஈரோடு மாவட்டம்), அம்பாசமுத்திரம் (நெல்லை மாவட்டம்), திருச்சி கிழக்கு (திருச்சி மாவட்டம்) ஆகிய 7 தொகுதிகள் காலியாக உள்ளன. இதில், மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு கடந்த 6-ந்தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. பொதுவாக, இடைத்தேர்தல் என்பது ஆளுங்கட்சியை எடைபோடும் தேர்தல் என்பதால், 4 மாத கால த.வெ.க. ஆட்சி மக்களை திருப்திபடுத்தியதா?, […]

செய்திகள்

தமிழ் வம்சாவளியை சேர்ந்த நவநீதம் பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு

இந்த ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த ‘தமிழ் வம்சாவளி’ நவநீதம் பிள்ளைக்கு வழங்கப்படுவதாக நார்வே நோபல் குழு அறிவித்துள்ளது. அமைதி மற்றும் சர்வதேச சட்டத்தை மேம்படுத்துவதற்கான அவரது முயற்சிகளுக்காக நவநீதம் ‘நவி’ பிள்ளைக்கு நோபல் பரிசு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த நவநீதம் பிள்ளை, 1890-களில் கரும்பு வெட்டும் கூலியாக தென்னாப்பிரிக்காவுக்குச் சென்றவர்களின் வழித்தோன்றல் ஆவார். தென்னாப்பிரிக்காவின் டர்பனில் பிறந்த நவநீதம் பிள்ளை, ஆழமான கட்டமைப்பு ரீதியான பாகுபாடு, பிரிவினை மற்றும் புறக்கணிப்பை […]

தூத்துக்குடி

தூத்துக்குடி உள்பட 9 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை

சென்னை வானிலை ஆய்வு மையம்  சார்பில்  வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- சுமார் 0.9 கிமீ உயரத்தில் குமரிக்கடல் பகுதிகளிலிருந்து வடக்கு உள் கர்நாடகா வரை தமிழகம் மற்றும் தெற்கு உள் கர்நாடகா வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது. இதன் காரணமாக இன்று (9-10-2026): கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலை பகுதிகள், நீலகிரி, தேனி, தென்காசி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் […]

தூத்துக்குடி

புதிய தொழிற்பயிற்சி நிலையங்கள் தொடங்க விண்ணப்பிக்கலாம்; ஆட்சியர் விஷு மகாஜன் தகவல்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன்  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: – தமிழகத்தில் புதிய தொழிற்பயிற்சி நிலையங்களை (ITI) உருவாக்குதல், ஏற்கனவே செயல்பட்டு வரும் தொழிற்பயிற்சி நிலையங்களின் அங்கீகாரத்தைப் புதுப்பித்தல் மற்றும் அவற்றில் புதிய தொழிற்பிரிவுகள் அல்லது கூடுதல் அலகுகளை (Additional Units) உருவாக்குவதற்கான விண்ணப்பங்கள் இணையதளம் வழியாக வரவேற்கப்படுகின்றன. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புவோர், வரும் 01.10.2026 முதல் 31.10.2026 வரை [https://affiliation-dgt.skillindiadigital.gov.in/](https://affiliation-dgt.skillindiadigital.gov.in/) என்ற புதிய ஐடிஐ இணைப்பு இணையதளம் (DGT Affiliation Portal) வாயிலாகத் […]

செய்திகள்

உதவி பேராசிரியர்களுக்கான `நெட்’ தகுதி தேர்வு தேதி அறிவிப்பு

நடப்பாண்டில் டிசம்பர் மாத ம் ஸ்லெட் மற்றும் நெட் தேர்வு நடைபெற உள்ளத டிசம்பர் 19,22,27 ஆகிய தேதிகளில் தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் அடுத்த மாதம் 5 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என, தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியில் சேர ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இதேபோல், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் […]