தூத்துக்குடியில் லாட்டரி சீட்டுகள் விற்றதாக 7 பேர் கைது
தூத்துக்குடி தெற்கு காவல் நிலைய போலீசார் மேற்கொண்ட தீவிர சோதனையில், சட்டவிரோதமாக லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்ட ஆன்ஸ்டன் (42), நவீன்ராஜா (26), சூர்யா (25), நாராயணசாமி (40), கோபிகண்ணன் (36), கண்ணன் (37) மற்றும் டெல்லிபாபு (30) ஆகிய ஆகிய 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

சோதனையின்போது அவர்களிடமிருந்து மொத்தம் 11 செல்போன்கள், 3 இருசக்கர வாகனங்கள் மற்றும் ரூபாய் 77,300/- ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. எதிரிகள் மீது Lottery Regulation Act-ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.







