கோவில்பட்டி பெருமாள் கோவிலில் புரட்டாசி சனி சிறப்பு பூஜை
கோவில்பட்டி வணிக வைசிய சமுதாயத்துக்கு பாத்தியப்பட்ட
தனுஷ்கோடிபுரம் தெருவில் உள்ள ஸ்ரீஅலமேலுமங்கா பத்மாவதி தாயார் சமேத வெங்கடேச பெருமாள் சன்னதியில் புரட்டாசி மாத சனி சிறப்பு பூஜை நடைப்பெற்றது.

இதனையொட்டி பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடை பெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பஜனை பாடல்கள் பாடினர்.பூஜைகளை சுப்பிரமணியசாமி செய்தார். கோவில் தலைவர் வெங்கடேஷ், செயலாளர் வேல்முருகன், பொருளாளர் தங்கமாரியப்பன், நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.







