கோவில்பட்டி அருகே குளவிகள் கொட்டியதில் 100க்கும் மேற்பட்டோர் பாதிப்பு
Oplus_16908288

கோவில்பட்டி அருகே குருமலை தாழையூத்தில் உள்ள அய்யனார் கோவிலுக்கு, முடுக்கலாங்குளம் கிராமத்தைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட ஆண்கள் மழை வேண்டி பூஜை செய்வதற்காக சென்றனர். ஆட்டு கிடா வெட்டி சாமிக்கு படையல் போட்டு பூஜை முடித்த பிறகு, அனைவரும் சாப்பிடுவதற்கு அமர்ந்தனர்.
அப்போது திடீரென அந்த பகுதியில் கூட்டமாக வந்த கடந்தை (கதண்டு) குளவிகள் சாப்பிட அமர்ந்தவர்களை கொட்ட தொடங்கின. இதனால் சாப்பிட அமர்ந்தவர்கள் தலை தெறிக்க அங்கும் இங்கும் ஓடினர்.

இருந்த போதிலும் கடந்தை (கதண்டு) குளவிகள் விடாது துரத்தி கொட்டின. இதில் 100-க்கும் மேற்பட்டவர்களை கடந்தை (கதண்டு) குளவிகள் பதம் பார்த்த நிலையில் அனைவரும் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதில் 25 பேருக்கு மட்டும் அதிகமாக கடந்தை (கதண்டு) குளவிகள் கொட்டியிருந்ததால் அவர்கள் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டனர். மற்றவர்கள் சிகிச்சை பெற்று வீட்டுக்கு சென்று விட்டனர்.







