சென்னை கீழ்ப்பாக்கம் டெய்லர் சாலையில் இயங்கி வருகிறது பஞ்சாப் நேஷனல் வங்கி கிளை. இந்த வங்கியின் பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த, வாடிக்கையாளர்களின் அசல் தங்க நகைகளை எடுத்து கொண்டு, அதற்கு பதிலாகபோலி நகை களை மாற்றி வைத்து வங்கியின் ஊழியர்கள். 3.15 கோடி ரூபாய்க்கும் மேல் மோசடி செய்துள்ளனர் வங்கிக்கு கடந்த ஏப்ரல் 24-ஆம் தேதி கணேஷ் சந்திரபாண்டா என்பவர் புதிய முதன்மை மேலாளராக பொறுப்பேற்றார். பொறுப்பேற்ற சில நாட்களிலேயே வாடிக்கையாளர் ஒருவரின் நகை பாக்கெட் மாயமானதை […]
நாடாளுமன்ற மக்களவையில் தொகுதி மறுவரையறை மற்றும் இடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் கொண்டு வரப்பட்ட அரசியலமைப்பு திருத்த மசோதா தோல்வியடைந்தது. இதனை தொடர்ந்து, ‘இந்தியா’ கூட்டணியின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து விவாதிக்க தி.மு.க. நாடாளுமன்ற குழுத்தலைவரும், எம்.பி.யுமான கனிமொழி, மும்பை பந்திராவில் உள்ள உத்தவ் தாக்கரேவின் ‘மாதோஸ்ரீ’ இல்லத்திற்கு நேற்று முன்தினம் சென்றார். கனிமொழி எம்.பி.யை உத்தவ் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பொன்னாடை போர்த்தி வரவேற்றார். இந்த சந்திப்பின் போது உத்தவ் சிவசேனா கட்சியின் நாடாளுமன்ற […]
கோவில்பட்டி நான்கு வழிச்சாலை சர்வீஸ் ரோட்டில் உள்ள சில்வர்ஸ்டோன் ரிசார்ட்ஸ் ஓட்டலில் பாதம் மற்றும் கணுக்கால் மருத்துவ கல்வியை தொடருதல் மற்றும் கருத்தரங்கம் நடத்தப்படுகிறது. வருகிற 20-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த கருத்தரங்கம் நடைபெறுகிறது,. தமிழ்நாடு முழுவதிலும் இருந்து பிரபல டாக்டர்கள் கலந்து கொள்கிறார்கள். .பாதம் மற்றும் கணுக்கால் சிகிச்சை முறைகள் பற்றி பல்வேறு தலைப்புகளில் மருத்துவ நிபுணர்கள் சிறப்புரை ஆற்றுகிறார்கள். `”பாதம் மற்றும் கணுக்கால்’ சிகிச்சையில் […]
கோவில்பட்டி அருகே ஆம்னி பஸ்சில் திருட்டுப்போன 40 பவுன் நகைகள் மத்தியபிரதேசத்தில் மீட்பு;
திருநெல்வேலி , பொதிகை நகரைச் சேர்ந்தவர் ஜஸ்டின் (வயது 56). இவருடைய மனைவி ஜூலியட். இவர் ஒரு தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர்கள் 2 பேரும் சென்னையில் உள்ள மகன் வீட்டுக்கு செல்வதற்காக கடந்த மாதம் ஆகஸ்டு 27-ந் தேதி இரவில் நெல்லையில் இருந்து ஆம்னி பஸ்சில் புறப்பட்டு சென்றனர். அவர்கள் சுமார் 40 பவுன் தங்க நகைகளை கைப்பையில் வைத்திருந்தனர். அந்த பஸ், தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு சுங்கச்சாவடியை கடந்து கோவில்பட்டி […]
மதுரை அப்போலோ சிறப்பு மருத்துவமனை, தென் இந்திய தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் 1974-77ம் ஆண்டு நாடார் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் சங்கம் இணைந்து கோவில்பட்டியில் இலவச பொது மருத்துவ முகாமை நடத்தின. இந்த முகாம் கோவில்பட்டி ஆழ்வார் தெருவில் உள்ள செயின்ட் பால்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நேற்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற்றது. முகாமில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்,. முகாம் நடந்த இடத்தில் காத்திருப்பு அறை , பதிவு செய்யுமிடம், […]
ஆட்டோ தொழிலாளர்களுக்கான ஓய்வூதியத்தை ரூ.6 ஆயிரமாக உயர்த்த வேண்டும்; ஏ.ஐ.டி.யு.சி. மாநாட்டில் தீர்மானம்
தூத்துக்குடி மாவட்ட ஏஐடியுசி ஆட்டோ மற்றும் போக்குவரத்து தொழிலாளர் சங்க மாவட்ட மாநாடு கோவில்பட்டி ஜீவா இல்லத்தில் நடந்தது. மாநாட்டிற்கு பாபு தலைமை தாங்கினார். ஏஐடியுசி ஆட்டோ மற்றும் போக்குவரத்து தொழிலாளர் சங்க மாவட்ட பொதுச் செயலாளர் பாலசிங்கம் வேலை அறிக்கையை சமர்ப்பித்தார். இந்திய கம்யூனிஸ்ட் நகரச் செயலாளர் செந்தில் ஆறுமுகம், நகர உதவி செயலாளர் விஜயலட்சுமி, நகரக்குழு உறுப்பினர் முனியசாமி ஆகியோர் பேசினர். மாவட்ட ஏஐடியுசி தலைவர் கிருஷ்ணராஜ், மாவட்ட செயலாளர் லோகநாதன் ஆகியோர் வாழ்த்துரை […]
கோவில்பட்டியில் இன்று நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 583 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. கோவில்பட்டி சார்பு நீதிமன்றத்தில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் கோவில்பட்டி சார்பு நீதிமன்ற நீதிபதி மாரிக்காளை தலைமையில், மாவட்ட உரிமையியல் நீதிபதி கருப்பசாமி, குற்றவியல் நீதிமன்ற நீதிபதிகள் (எண்.1) ஆனந்த், (எண்.2) மணிமேகலா ஆகியோர் முன்னிலையில் 583 வழக்குகளுக்கு சமரசம் மூலம் தீர்வு காணப்பட்டது. மோட்டார் வாகன விபத்து வழக்கு, உரிமையியல் வழக்குகள், சிறு, குறு வழக்குகள், காசோலை மோசடி வழக்கு, வங்கி […]
கோவில்பட்டி எஸ்.எஸ்.துரைச்சாமி நாடார் மாரியம்மாள் (எஸ். எஸ். டி. எம்.)கலை மற்றும் அறிவியல் கல்லூரி 27வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. விழாவிற்கு நாடார் உறவின்முறைச் சங்கத் தலைவர் ஆர். எஸ்.ரமேஷ் தலைமை தாங்கினார். கல்லூரி செயலாளர் கண்ணன், நாடார் உறவின்முறை சங்க பொருளாளர் சுரேஷ்குமார், பத்திரகாளியம்மன் கோவில் தர்மகர்த்தா மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் செல்வராஜ் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். மும்பை நியூக்ளியர் புரொஜ்ட் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும் விஞ்ஞானியுமான காளிராஜ் சிறப்பு […]
மதுரை அப்போலோ சிறப்பு மருத்துவமனை, தென் இந்திய தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும்1974-77ம் ஆண்டு நாடார் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் சங்கம் இணைந்து நாளை ஞாயிற்றுக்கிழமை கோவில்பட்டியில் இலவச பொது மருத்துவ முகாம் நடத்துகின்றன,&இந்த முகாம் கோவில்பட்டி ஆழ்வார் தெருவில் உள்ள செயின்ட் பால்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நடக்கிறது, இந்த முகாமில் உயரம், எடை, ரத்த அழுத்தம், ரத்தத்தின் சர்க்கரை அளவு, மருத்துவரின் பரிந்துரைப்படி இ.சி.ஜி/ பரிசோதனை […]
தூத்துக்குடி மாவட்ட அஸ்ட்ரோ கிளப் செயலாளர் முத்து முருகனுக்கு சிறந்த அறிவியல் பரப்புரையாளர்
திருச்சி ராமன் ரிச்சர்ச் பவுண்டேஷன் சார்பில் தூத்துக்குடி மாவட்ட அஸ்ட்ரோ கிளப் செயலாளர் முத்து முருகனுக்கு சிறந்த அறிவியல் பரப்புரையாளருக்கான விருது வழங்கப்பட்டது. திருச்சியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் அறிவியல் பேராசிரியர்களால் நடத்தப்படும் ராமன் ரிச்சர்ச் பவுண்டேஷன் சார்பில் அறிவியலின் மேம்பாட்டிற்கு சாதனை படைக்கும் வருடந்தோறும் 2 பேராசிரியர்கள் மற்றும் 1பேராசிரியர் அல்லாத நபர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. நெல்லை சாராள் தக்கர் கல்லூரியில் அண்மையில் நடந்த செயல் திறன் மிக்க பொருட்களில் சமீத்திய முன்னேற்றங்கள் எனும் […]







