கோவில்பட்டியில் இலவச மருத்துவ முகாம் 191 பேர் பயன் பெற்றனர்

மதுரை அப்போலோ சிறப்பு மருத்துவமனை, தென் இந்திய தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் 1974-77ம் ஆண்டு நாடார் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் சங்கம் இணைந்து கோவில்பட்டியில் இலவச பொது மருத்துவ முகாமை நடத்தின.
இந்த முகாம் கோவில்பட்டி ஆழ்வார் தெருவில் உள்ள செயின்ட் பால்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நேற்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற்றது. முகாமில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்,.
முகாம் நடந்த இடத்தில் காத்திருப்பு அறை , பதிவு செய்யுமிடம், எடை பார்த்தல், இ.சி.ஜி,.பார்த்தல், மருந்தகம், டாக்டர்கள் அறைகள் என்று தனித்தனியாக ஒதுக்கப்பட்டு இருந்தன.

இந்த முகாமில் உயரம், எடை, ரத்த அழுத்தம், ரத்தத்தின் சர்க்கரை அளவு, இ.சி.ஜி/ பரிசோதனை மற்றும் பொது நல மருத்துவரின் ஆலோசனை , மருந்து மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டன. முகாம் மூலம் மொத்தம் 191 பேர் பயன் பெற்றனர்,
முகாமில் தென்னிந்திய தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் 1974 – 77 ஆம் ஆண்டு நாடார் உயர்நிலை பள்ளி மாணவர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.ல் தொழில் அதிபர்கள் என்.ராஜவேல், ஆர்.வரதராஜன், அம்புரூஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்,







