கோவில்பட்டி எட்டயபுரம் ரோட்டில் தலைமை தபால் அலுவலகம் அருகே சமூக நீதி மாணவிகள் விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியின் முதல் தளத்தில் 105 மாணவிகளும், 2-வது தளத்தில் 55 மாணவிகளும் தங்கி, கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் கல்வி பயின்று வருகின்றனர். இந்த நிலையில், இந்த விடுதியில் தங்கி பயிலுவதற்காக கோவில்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து, அரசால் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை தாண்டி வருடந்தோறும் ஏராளமான விண்ணப்பங்கள் வருவதாகவும், இடப்பற்றாக்குறை காரணமாக விண்ணப்பங்கள் […]
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தந்தை- மகன்கொலை வழக்கில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்ளிட்ட 9 போலீசாரும் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளனர். கடந்த 2020ஆம் ஆண்டில், சாத்தான்குளத்தைச் சேர்ந்த வணிகர் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் விசாரணை என்ற பெயரில் போலீசார் காவல் நிலையத்தில் வைத்து கடுமையான சித்திரவதைக்கு உள்ளாக்கினர். இதில் படுகாயமடைந்த தந்தை, மகன் இருவரும் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர். தமிழகத்தையே உலுக்கிய […]
தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்துள்ளது. இந்த நிலையில் சட்டசபை யில் கடந்த மாதம் 13-ந்தேதி ஆளும் த.வெ.க.வுக்கு ஆதர வாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 25 பேர் த.வெ.க.வுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.இதையடுத்து அவர்களுக்கு எதிராக கட்சித்தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க கோரி, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சபாநாயகர் ஜே.சி.டி.பிரபா கரிடம் […]
ஆசிரியர்களின் பணி மாறுதல் கலந்தாய்வு, நேர்மையான முறையில் நடத்திட வேண்டும்; தமிழக ஆசிரியர்
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தனியார் திருமண மண்டபத்தில் தமிழக ஆசிரியர் கூட்டணி விளாத்திகுளம் வட்டார கிளையின் ஆண்டு விழா, பணி நிறைவு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா மற்றும் விருது பெற்ற ஆசிரியர்களுக்கும் பள்ளிகளுக்கும், 25 ஆண்டுகள் பணியை முடித்துள்ள ஆசிரியர்களுக்கும் பாராட்டு விழா என முப்பெரும் விழா நடைபெற்றது. விழாவிற்கு ஐபெட்டோ அகில இந்திய செயலாளர் அண்ணாமலை தலைமை தாங்கினார்.. தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அரசுப் பள்ளி ஆசிரியர்கள், தலைமையாசிரியர்கள் மற்றும் பணி […]
தமிழகத்தில் முதற்கட்டமாக மூடப்பட்டுள்ள 717 டாஸ்மாக் மதுக்கடைகளின் மாவட்ட மற்றும் மண்டல வாரியான அதிகாரப்பூர்வ பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் மொத்தம் 4,829 டாஸ்மாக் மதுக்கடைகள் இயங்கி வந்தன. இதன் மூலம் கடந்த நிதி ஆண்டில் மட்டும் அரசுக்கு ரூ.48,344 கோடி வருவாய் கிடைத்துள்ளது. எனினும், மதுவினால் ஏற்படும் சமூகச் சீரழிவுகளைத் தடுக்கப் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வந்தது. இதனிடையே, தமிழகத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தைத் […]
கோவில்பட்டி தேவர் சமூக நலச்சங்கம் சார்பாக மூன்றாம் ஆண்டு 10 வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற சமுதாய மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நேற்று நடந்தது. கோவில்பட்டி மெயின் ரோட்டில் உள்ள தனியார் விடுதி கூட்டரங்கில் நடந்த விழாவிற்கு, தேவர் சமூக நலச்சங்கத் தலைவர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். செயலாளர் வேல்முருகன், பொருளாளர் சுவாதி ராஜா, துணைத் தலைவர்கள் பூல்பாண்டியன், கோடையிடி ராமச்சந்திரன், இணைச் செயலாளர் மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். […]
அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதலால் மத்திய கிழக்கில் கடந்த சில மாதங்களாக பதற்றமான சூழ்நிலை நிலவியது. இந்த தாக்குதலில் முக்கிய அரசியல் தலைவர்கள், இரு தரப்பு வீரர்கள், அப்பாவி பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். அமெரிக்காவுடனான மோதலை தொடர்ந்து ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியது. இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது. அதேவேளை, ஈரானின் துறைமுகங்களை அமெரிக்க கடற்படை முடக்கியது. இதனால் ஈரானுக்கு சரக்கு, கச்சா எண்ணெய் கப்பல்கள் செல்வது […]
தமிழ்நாடு முதல்-அமைச்சர் ச.ஜோசப் விஜய் இன்று தலைமைச் செயலகத்தில், இந்திய அரசின் “கீர்த்தி சக்ரா” விருது பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர் லான்ஸ் நாயக் அ. மீனாட்சி சுந்தரத்துக்கு பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில்… வெளிப்படுத்திய அசாத்திய வீர தீரச் செயலைப் பாராட்டி தமிழ்நாடு அரசின் சார்பில் 48 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். இந்திய ராணுவத்தின் பீரங்கிப் படைப்பிரிவில் பணியாற்றிவரும் தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த லான்ஸ் நாயக் அ. மீனாட்சி சுந்தர டிசம்பர் 19, […]
கோவில்பட்டி எஸ்.எஸ்.டி.எம் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான தொடக்க விழா மற்றும் பெற்றோர்
கோவில்பட்டி எஸ் எஸ் துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான தொடக்க விழா மற்றும் பெற்றோர் ஆசிரியர் கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி செயலாளர் கண்ணன் தலைமை தாங்கினார். கல்லூரியின் நிர்வாக குழு உறுப்பினர்கள் தங்கமணி, சரவணகுமார், முன்னாள் மாணவர் மகேந்திரன் மற்றும் முதல்வர் முனைவர். செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியின் தொடக்கத்தில் இயற்பியல் துறை தலைவர் பிரியங்கா வரவேற்புரை வழங்கினார். கல்லூரி செயலாளர் கண்ணன் பேசுகையில், கல்லூரியை பற்றியும் மாணவர்களின் வளர்ச்சியில் […]
கோவில்பட்டியில் நடந்த அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கடம்பூர் ராஜு விமர்சனத்திற்கு எதிர்ப்பு: இருதரப்பினர்
நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக படுதோல்வியைச் சந்தித்தது. 47 தொகுதிகளில் மட்டுமே அதிமுக வெற்றி பெற்றிருந்த நிலையில், மரகதம் குமரவேல், சத்யபாமா, ஜெயக்குமார், இசக்கி சுப்பையா ஆகிய 4 எம்எல்ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளனர். அதைத் தொடர்ந்து, அதிமுக முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்எல்ஏக்கள், முன்னாள் எம்பிக்கள் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்டோர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். இதில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளராக இருந்த […]







