அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியருக்கு பரிசளிப்பு
கோவில்பட்டி தேவர் சமூக நலச்சங்கம் சார்பாக மூன்றாம் ஆண்டு 10 வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற சமுதாய மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நேற்று நடந்தது.
கோவில்பட்டி மெயின் ரோட்டில் உள்ள தனியார் விடுதி கூட்டரங்கில் நடந்த விழாவிற்கு, தேவர் சமூக நலச்சங்கத் தலைவர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். செயலாளர் வேல்முருகன், பொருளாளர் சுவாதி ராஜா, துணைத் தலைவர்கள் பூல்பாண்டியன், கோடையிடி ராமச்சந்திரன், இணைச் செயலாளர் மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். விளாத்திகுளம் வட்டார தேவர் மகாஜன சங்கத் தலைவர் சக்திவேல் வரவேற்றார்.

கோவில்பட்டி எம்.எல்.ஏ., கருணாநிதி, தமிழ்நாடு அகம் அலுவலர் நலச்சங்க மாநிலத் தலைவர் சுடலைமுத்து ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு, 10 மற்றும் 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ரொக்கப் பரிசுகளை வழங்கி பாராட்டினர்.
விழாவில்,தொழிலதிபர்கள் சிவகணேஷ்குமார்,சதீஷ், காளியப்பன், ரமேஷ்,மாயக்கண்ணன், முனியசாமி,சுரேஷ், தமிழ்நாடு அகம் அலுவலர்கள் நலச்சங்க தூத்துக்குடி மாவட்டத் தலைவர் வடிவேல் முருகன், கோவில்பட்டி தேவர் சமூக நலச்சங்க நிர்வாக குழுவைச் சேர்ந்த ராஜு, கார்மேக பாண்டியன், அசோக் குமார், மகேஸ்வரன், லட்சுமண பாண்டியன், ராஜமார்த்தாண்டன், ராமர், செல்லப்பாண்டியன் மற்றும் தேவர் சமூக நலச்சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிகளை எப்.எம்., வானொலி அறிவிப்பாளர் ஜெமீமா தொகுத்து வழங்கினார். ராஜா ஐஏஎஸ்., அகாடமி நிறுவனர் முத்துச்செல்வி நன்றி கூறினார்.







